வியாழன், 24 செப்டம்பர், 2015

செபியின் புதிய விதி முறைகளும், முதலீடு கட்டண சேவையும்

பங்குச்சந்தையில் பரிந்துரை செய்பவர்களுக்கு செபி சில விதி முறைகளை அறிவித்துள்ளது.


அதன்படி, பங்கு பரிந்துரைகளை தருபவர்கள் செபி நிர்வாகத்திடம் Research Analyst என்ற சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும்.

மற்றவர்கள் பொதுவில் பங்குகளை Buy/Sell/Hold என்று பரிந்துரைகள் செய்ய அனுமதி இல்லை.அதனால் எமது கட்டண சேவை மூலம் பங்கு பரிந்துரை கொடுத்து வந்ததை தற்போது நிறுத்தி வைக்கிறோம்.

ஆனாலும் முதலீடு ஆலோசனை, பரிந்துரை இல்லாத கட்டுரைகள் எழுதுதல் தொடர்பாக எந்த வித தடையும் இல்லை. அதனால் நமது தளத்தில் கட்டுரைகளைத் தொடர்கிறோம்.

ஏற்கனவே போர்ட்போலியோ பெற்றவர்கள் பரிந்துரை செய்த பங்குகள் தொடர்பான கருத்துக்களை எம்மிடம் பெறலாம். 

அது போல் தனிப்பட்ட முறையில் ஆலோசனை மற்றும் சேவை வேண்டுபவர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் தளங்களுக்கு Adsense விளம்பரங்கள் கொடுக்கப்படுவதில்லை. அதனால் தற்போது இந்த தளம் நடத்துவதற்கு தேவையான ஒரே பொருளாதார வழி அடைக்கப்பட்டு விட்டது என்பதால் கொஞ்சம் வருத்தம் தான்.

ஆனாலும் சேவை நோக்கம் மற்றும் விரிவாகும் நட்பு வட்டாரம் கருதி முதலீடு தளத்தை கட்டுரைகள் மூலம் தொடர்கிறோம்.

செபியின் நடவடிக்கை அரை குறை ஆலோசகர்கள் மூலம் பொது மக்கள் நஷ்டப்படுவதை தடுக்க பெரிதும் உதவும். அந்த வகையில் பயனளிக்கும் நடவடிக்கை.

சீனியர்களில் பலர் மீண்டும் தேர்வு எழுதி ஜெயிக்க வேண்டும் என்ற கடின எண்ணத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். அதனால் இந்தியாவில் உள்ள ஆலோசகர்களில் 10% மட்டும் தான் இது வரை சான்றிதழ் பெற்றுள்ளனர்.

இதனால் சிறு முதலீட்டாளர்களுக்கு பகுதி நேர ஆலோசனை சொல்பவர்கள் கிடைப்பது கடினம். முழு நேர ஆலோசகர்களுக்கு அதிக அளவில் செலவழிக்க வேண்டிய நிலை வரலாம்.

எமக்கும் செபியின் தேர்வு எழுதி சான்றிதழ் பெற்று ஆலோசனைகளை கொடுக்க விருப்பம் தான்.

ஆனாலும் முக்கிய விதிமுறைகள் படி, முழு நேரமாக மட்டுமே பரிந்துரை பணியை செய்ய வேண்டும். மட்டுமல்லாமல் பரிந்துரை செய்யும் பங்குகளில் நாம் முதலீடு செய்யக் கூடாது.

இது எமது தனிப்பட்ட முதலீடையும் பாதிக்கும் என்பதால் ஒரு கடினமான சூழ்நிலை.

நாம் இந்த தளத்தை ஆரம்பிக்கும் போது சொல்லியது. மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் நல்லது. அந்த வகையில் நல்ல படிப்பினை கட்டுரைகள் தரும் தளமாக முதலீடை தொடர்வோம்!

இந்த தருணத்தில் தற்போது நமது தளம் மாதத்திற்கு ஐம்பதாயிரம் பார்வையாளர்களை தாண்டி சென்று வருகிறது என்பதையும் மகிழ்வுடன் பகிர்கிறோம்.

ஆதரவிற்கு நன்றி!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக