ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சந்தை சரிவுகளை தாண்டி 220% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

நமது தளம் சார்பில் அக்டோபர் 2013ல் இலவசமாக போர்ட்போலியோ பரிந்துரை செய்யப்பட்டது.


இறுதியாக கடந்த மே மாதத்தில் இந்த போர்ட்போலியோ  நிலவரத்தை பற்றி தெரிவித்து இருந்தோம். அந்த சமயத்தில் 186% அளவு லாபம் கொடுத்து இருந்தது. அதன் பிறகு தற்போது பகிர்கிறோம்.

இந்த மூன்று மாதங்களில் சந்தை அடித்து துவைக்கப்பட்டது நாம் அறிந்ததே. கிட்டத்தட்ட 20% சந்தை சரிந்து உள்ளது.

ஆனால் ஆச்சர்யமாக நமது போர்ட்போலியோ மேலே எழுந்து 186% என்பதிலிருந்து 220% லாபத்தை எட்டியுள்ளது.


இதற்கு போர்ட்போலியோவில் உள்ள Britannia, Abbott, AEGIS என்ற மூன்று நிறுவனங்களும் சந்தையின் சரிவுகளையும் தாண்டி கணிசமாக லாபத்தைக் கொடுத்து இருந்தன. இந்த நிறுவனங்களின் நிதி அறிக்கையில் கணிசமாக லாபம் கூடியதே ஒரு முக்கிய காரணம்.

நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டால் மற்ற உலக காரணிகளோ, சந்தையின் நிகழ்வுகளோ பெரிய அளவில் பாதிக்காது என்பதை இந்த போர்ட்போலியோவின் மூலம் அறிய முடிந்தது.

எமது தளத்தின் சார்பில் மாதந்தோறும் தரப்படும் கட்டண சேவையின் அடுத்த போர்ட்போலியோ வரும் செப்டம்பர் 19ல் தரப்படுகிறது. விரும்பும் நண்பரகள் இணைந்து கொள்ளலாம்.

எமது தொடர்பு முகவரி: muthaleedu@gmail.com

செப்டம்பர் மாத போர்ட்போலியோ  விவரங்களை அறிய இந்த இணைப்பை  பார்க்கவும்.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக