புதன், 9 செப்டம்பர், 2015

செப்டம்பர் போர்ட்போலியோ தொடர்பான அறிவிப்பு

செப்டம்பர் மாத கட்டண போர்ட்போலியோவை செப்டம்பர் 19 அன்று தரவிருக்கிறோம்.


கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு சிறு ஓய்வு கருதி போர்ட்போலியோ சேவையைக் கொடுக்க முடியாமல் போனது.

ஆனாலும் விருப்ப போர்ட்போலியோ மூலம் நண்பர்கள் தொடர்பில் இருந்தனர். நன்றி!



தற்போது ஒரு குறுகிய காலத்திற்கு பாதகமான காரணிகள் இருந்தாலும் நீண்ட கால முதலீட்டிற்கு தற்போதைய சந்தை ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுத்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வருவது முன் முதலீடு செய்தவர்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் கணிசமான பலனைப் பெற்றனர்.

உதாரணத்திற்கு மோடி வருமுன் நாம் பரிந்துரை செய்த எமது முதல் இலவச போர்ட்போலியோ 220% லாபம் கொடுத்து இருந்தது.

பார்க்க: 220% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

அப்படியொரு கணிசமான லாபம் கிடைக்கும் வாய்ப்பு தற்போது தான் உருவாக்கி உள்ளதாக கருதுகிறோம்.

அதனால் செப்டெம்பரில் போர்ட்போலியோ சேவையை செப்டம்பர் 19 அன்று தருகிறோம்.

இனி எல்லா மாதங்கள் என்பதை விட சந்தை சூழ்நிலை சரியாக இருக்கும் மாதங்களில் மட்டும் போர்ட்போலியோ பரிந்துரை செய்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

சந்தேகங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த சேவையைப் பற்றிய சுருக்கமான குறிப்புகள்:


  • 1300 ரூபாய்க்கு எட்டு பங்குகள் எட்டு துறைகள் சமநிலை சார்ந்து பரிந்துரைக்கப்படும். இதில் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தவர்கள் இணையலாம்.
  • அதிக அளவு பண முதலீடு செய்ய முடியாதவர்கள் 700 ரூபாய்க்கு தரப்படும் மினி போர்ட்போலியோவில் இணையலாம். அதில் நான்கு பங்குகள் பரிந்துரைக்கப்படும்.
  • இரண்டு வருடங்களில் 40% அளவு வளர்ச்சி அடையும் வகையில் போர்ட்போலியோ வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
  • போர்ட்போலியோ அறிக்கையானது ஏன் பரிந்துரை செய்கிறோம்? என்ற காரனங்களுடன் விரிவாக இருக்கும்
  • போர்ட்போலியோ பெற்ற பிறகு இரண்டு வருடங்கள் போர்ட்போலியோ தொடர்பான சந்தேகங்களை எம்மிடம் கட்டணமின்றி பெறலாம்.


இந்த பரிந்துரை முற்றிலும் இரண்டு வருட அளவிற்கு நீண்ட கால முதலீட்டில் விருப்பமுடையவர்களுக்கு பொருத்தமானது. குறகிய கால வர்த்தகம் செய்பவர்கள் தவிர்க்கவும்.

இது வரை 14 மாதாந்திர போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. அதில் 12 நேர்மறையில் செல்கிறது.

தனிப்பட்ட தேவைகளுடன் கூடிய விருப்பம் இருந்தால் எமது விருப்ப போர்ட்போலியோ சேவைகளிலும் இணையலாம்.

இது தொடர்பான விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

நட்புடன்,
முதலீடு



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக