திங்கள், 28 செப்டம்பர், 2015

கடன் சுமையால் ஒதுங்கும் பெரிய கட்டுமான நிறுவனங்கள்

கடந்த சில வருடங்களில் காங்கிரஸ் அரசு செய்த சுணக்கத்தின் காரணமாக பல அரசு திட்டங்கள் முடங்கி போயிருந்தன.


அதில் ஒன்று நெடுஞ்சாலை போடுதல்.

பிஜேபி அரசு பதவி ஏற்ற பிறகு இதில் ஒரு நல்ல முன்னேற்றம் என்றே சொல்லலாம்.



இந்த வருடத்தின் முதல் பாதியில் மட்டும் 2,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு 30 நெடுஞ்சாலை திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 28,000 கோடியாகும்.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ப்ராஜெக்ட்களை பெறுவதற்கு பெரிய நிறுவனங்கள் கடுமையாக போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த நிறுவனங்கள் ஒதுங்கி விட்டன.

இதற்கு கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனங்களில் ஏற்பட்ட கடன் சுமையும் காரணம். L&T நிறுவனத்திற்கு மட்டும் 85,000 கோடி ரூபாய் அளவு கடன் உள்ளது.

இதனால் ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் ப்ரோஜெக்ட்களை முதலில் நல்ல படியாக முடித்து லாபத்தை பார்ப்போம் என்று முடிவு செய்து விட்டன.

இதனால் L&T நிறுவனம் 30 திட்டங்களில் 7 ப்ராஜெக்ட்களுக்கு மட்டுமே விண்ணப்பித்தது.

இந்த காரணங்களால் G.R.Infra, Dilip Buildcon Ltd and Sadbhav Engineering போன்ற சிறிய நிறுவனங்கள் நல்ல வாய்ப்பை பெற்றன.

போட்டியும் குறைந்ததால் டென்டர் மதிப்பை பெரிதளவு குறைக்கவும் அவசியம் இல்லாமல் போய் விட்டது.

முன்னர் நெடுஞ்சாலை திட்டங்களில் சம்பாதிக்கும் லாபத்தை மீண்டும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு விதி முறை இருந்தது. தற்போது அரசு இந்த விதி முறையை நீக்கி விட்டது.

இதனால் இந்த கட்டமைப்பு நிறுவனங்கள் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சை விட்டு கடனை அடைக்க துவங்கி விட்டன.

இதுவும் நல்லது தான். அதிக அளவில் ப்ராஜெக்ட்களை பெற்று ஒன்றையும் முடிக்காமல் இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

மலிவாக கிடைக்கும் கட்டமைப்பு நிறுவன பங்குகளில் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு கால நோக்கில் முதலீடு செய்தால் அதிக பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக