புதன், 23 செப்டம்பர், 2015

காரணம் இல்லாமல் சரியும் சந்தை

நேற்று காலை இந்திய பங்குச்சந்தை 500 புள்ளிகள் வரை உயர்வை சந்தித்து இருந்தது.
அடுத்து பிற்பகலில் அதே அளவு புள்ளிகளில் வீழ்ந்தது.



தினசரி சரிவுகளில் பெரிதளவு கவனம் செலுத்தாததால் விட்டு விட்டோம்.

ஆனால் நண்பர்களிடம் இருந்து வந்த சில மின் அஞ்சல்கள் வந்ததால் காரணத்தை தேடினோம்.

எல்லாம் அதே பழைய மொக்கை காரணங்களாக இருந்தது.

சீனா பொருளாதாரம் சரிவு, அமெரிக்க வட்டி என்பதோடு வோல்க்ஸ்வேகன், ஆம்டேக் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளும் காரணங்களாக முளைத்து இருந்தன.

தனிப்பட்ட முறையில் குறுகிய கால வர்த்தகம் செய்பவர்கள் தான் சந்தையில் விளையாடுவதை அறிய முடிகிறது. சிலர் லாபத்தை உறுதிப்படுத்த முயன்றுள்ளனர்.

அடுத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர்.

இதைத் தாண்டி 500 புள்ளிகள் சரிவிற்கு உருப்படியான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக், நீண்ட கால முதலீடுகளுக்கு இந்த சரிவுகளை வாங்கும் வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்! பங்குகள் மலிவில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன.

தொடர்பான கட்டுரைகள்:
முதலீடு பங்கு பரிந்துரை சேவைகள்


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக