திங்கள், 21 செப்டம்பர், 2015

1300 கோடி GST டீலை இன்போசிஸ் பெற்றது

இந்திய அரசு GST வரி விதிப்பை கொண்டு வருவதில் மும்மரமாக இருப்பது தெரிந்ததே.

பார்க்க:  GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?


நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு தேக்கம் ஏற்பட்டாலும் எப்படியும் வந்து விடும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு அடுத்தக் கட்ட நடவடிக்கையை ஆரம்பித்து விட்டது.இந்த வரி விதிப்பிற்கான மென்பொருள் தயாரிக்கும் பனி மிகப்பெரிய ஒன்றாக இருந்து வந்தது. அரசின் அணைத்து மட்டங்களிலும் இதனை நடைமுறைப்படுத்துவது என்பது சவாலான பணியாகம்.

இந்த பணியை யார் செய்வார்கள் என்பதில் இன்போசிஸ்,  TCS, விப்ரோ, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களிடையே கடுமையான போட்டி இருந்து வந்தது. இறுதியில் இன்போசிஸ் நிறுவனம் வெற்றி பெற்றது.

இந்த டீலின் மொத்த மதிப்பு 1380 கோடியாகும். அடுத்த ஆறு வருடங்களில் மென்பொருள் தயார் செய்து இருக்க வேண்டும்.

முதல் கட்டமாக நிறுவனங்கள் பதிவு செய்தல், வரி கட்டுதல் தொடர்பானவை போன்றவை விரைவில் முடிக்கப்படும். அதன் பிறகு அடுத்தக் கட்டத்தில் ஆய்வு செய்தல், ஆடிட்டிங் போன்றவை தொடர்பான மென்பொருள் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

வருடத்திற்கு பத்து லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் அணைத்து நிறுவனங்களும் இந்த வரி விதிப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.

இன்போசிஸ் நிறுவனத்தை பொறுத்த வரை இந்த டீல் உள்நாட்டில் கிடைக்கப்பெற்ற மிக முக்கிய பணியாகும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக