சரிய வைக்கும் உலகக் காரணிகளின் பின்னால் இரண்டு உள்நாட்டு விடயங்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இருந்தன.
ஒன்று வட்டி விகிதங்கள் குறைக்கப்படுதல், இரண்டாவது GST வரி தொடர்பான மசோதாவிற்கு பார்லிமென்ட் ஒப்புதலைப் பெறுதல்.
இதில் GST வந்தால் நிறுவனங்கள் ஒரே வரி முறையை நாடு முழுவதும் பின்பற்றினால் போதும். நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உதாரணத்திற்கு தமிழக ஆலையில் உற்பத்தியாகும் கார் பஞ்சாபில் விற்க வேண்டும் என்றால் தமிழகத்தில் உற்பத்தி வரியை செலுத்தி விட்டு பஞ்சாபில் விற்பனை வரி, சேவை வரியை செலுத்த வேண்டும். இடையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுங்க வரி கொடுக்க வேண்டும். இப்படி பல மட்டங்களில் வரி விதிக்கப்பட்டது.
இதனை எளிமைப்படுத்தும் விதமாகத் தான் GST வரி திட்டமிடப்பட்டது. இது காங்கிரஸ் காலத்தில் தான் வடிவம் பெற்றது. ஆனால் அதே காங்கிரஸ் அரசியல் காரணங்களால் எதிர்க்கிறது.
எதிர்ப்பு என்பது விவாதமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் நாடாளுமன்றத்தையே நடத்த முடியாமல் லலித் மோடி விவகாரங்களில் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் விவாதம் கூட கிடையாது. குடிக்க முடியாவிட்டாலும் கொட்டிக் கவிழ்க்கும் வேலையை சரியாக செய்து வருகிறார்கள்.
இதனை சமாதானப்படுத்த வேண்டிய ஆளுங்கட்சியான பிஜேபி காங்கிரஸ் கட்சிக்கு முடிந்த வரை கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டது. அதனால் வேடிக்கை தான் பார்க்கின்றனர் தவிர உருப்படியாக எதுவுமே செய்யவில்லை.
அடுத்து பீகார் போன்ற மாநிலங்களில் தேர்தல் முடிந்து தங்கள் ராஜ்யசபா பலம் கூடிய பிறகு பார்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்கள் போல..
அதனால் GST வரி மசோதாவிற்கு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்டலாம் என்ற முடிவை கைவிட்டு விட்டனர்.
இதனால் இந்த வருட இறுதி வரை GST வர வாய்ப்பே இல்லை. GST என்ற ஒரு முக்கிய உள்நாட்டு நேர்மறை காரணியை அடுத்து ஆறு மாதங்களுக்கு நம்ப வேண்டாம்.
2016 ஏப்ரல் மாதத்தில் GST நடைமுறைக்கு வருமாறு ஏற்பாடுகள் இருந்தன. ஆனால் அது தள்ளிப் போவது தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.
நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற பிறகு பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களும் ஒப்புதல் தர வேண்டும். இதனால் எவ்வளவு தாமதம் ஆகும் என்று கணிக்க முடியவில்லை.
மன்மோகன் காலத்தில் மெஜாரிட்டி இல்லாமல் சாதித்த அரசியல் சாணக்கிய தனங்கள் மோடி அரசில் சுத்தமாக இல்லை.
இதனால் GST வரியை நம்பிய லாஜிஸ்டிக்ஸ் பங்குகள் இன்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
தொடர்பான கட்டுரைகள்:
GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக