சனி, 26 செப்டம்பர், 2015

500 ரூபாய்க்கு குறைவாக பங்கினை பிரிக்க முடியாது (ப.ஆ - 46)

'பங்குச்சந்தை ஆரம்பம்'  என்ற இந்த தொடரின் முந்தையபகுதியை இங்கு காணலாம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நாம் பரிந்துரை செய்த இலவச போர்ட்போலியோவில் AEGIS LOGISTICS என்ற ஒரு நிறுவனத்தை பரிந்துரை செய்து இருந்தோம். (முதலீடு போர்ட்போலியோ விவரங்கள்)

அந்த போர்ட்போலியோவிலே மிக அதிக அளவு ரிடர்ன் கொடுத்ததும் அந்த பங்கு தான்.அதாவது 130 ரூபாய்க்கு பரிந்துரை செய்த பங்கு தற்போது 900 ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது. இரண்டு வருடத்தில் கிட்டத்தட்ட 600% உயர்வைக் கொடுத்தது..

AEGIS நிறுவனமானது இந்த மாதம் ஒவ்வொரு பங்கினையும் பத்து புதிய பங்குகளாக அறிவித்து இருந்தார்கள். இதனால் நமது போர்ட்போலியோ படி 150 பங்குகளில் முதலீடு செய்து இருந்தால் 1500 பங்குகள் கிடைத்து இருக்கும். இதனை Stock Split என்று சொல்வார்கள்.

பார்க்க: Stock Split: பங்கினை ஏன் பிரிக்கிறார்கள்? (ப.ஆ - 29)

பொதுவாக குறைந்த விலையில் பங்குகள் இருந்தால் அதிகம் பேர் வாங்குவார்கள். அதனால் பங்கு விலை மேலும் கூடும் என்ற எண்ணத்தில் செய்யப்படும் வேலை.

ஆனால் சிலர்  குறுகிய காலத்தில் கணிசமாக லாபம் பார்க்க பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு AEGIS பங்கு பிரிப்பதற்கு முன்னால் 800 ரூபாயில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. அதே பங்கு 80 ரூபாய்க்கு பத்து பங்குகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

பங்கு குறைந்த விலைக்கு வந்து விட்டதால் கூடும் என்ற எண்ணத்தில் பல குறுகிய கால வர்த்தகர்கள் சரியாக பிரிப்பதற்கு முன்னால் 800 ரூபாயில் பங்கில் முதலீடு செய்து இருந்தனர்.

பிரிக்கப்பட்ட பின்னர் ஒரே நாளில் பங்கு 100 ரூபாயைத் தாண்டியது. அந்த சமயத்தில் விற்று வெளியேறினார்கள். மீண்டும் பங்கு விலை 90 ரூபாய்க்கு வந்து விட்டது.

அதாவது ஒரு வாரத்தில் 25% லாபம்.

நிறுவனம் நிதி அறிக்கை எதுவும் கொடுக்கவில்லை. வியாபரத் தன்மையில் மாற்றம் இல்லை. வெறும் பங்கு பிரிக்கப்பட்டதற்காக மட்டும் கூடினால் அதில் அடிப்படை இல்லையே.கடந்த வருடத்தில் மட்டும் பிரிக்கப்பட்ட பங்குகளில் 30% தான் 500 ரூபாய்க்கு மேல் விலையைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இதனைக் கருத்தில் கொண்டு செபி தற்போது புதிய விதி முறையைக் கொண்டு வரவுள்ளது.

இதன்படி, பங்கு பிரிக்கப்பட்டால் பங்கின் விலை பிரிக்கப்பட்ட பிறகு குறைந்த பட்சம் 500 ரூபாயாக இருக்க வேண்டும் என்று செபி வரையறுத்துள்ளது.

இதனால் அதிக எண்ணிக்கையில் பங்கினை பிரித்து குறைந்த காலத்தில் யூக வணிகம் செய்வது ஓரளவு குறையும். அதே போல் பங்கின் விலை திடீர் என்று ஏற்றி இறக்கப்படுவது பெரிதும் குறையும்.

'பங்குச்சந்தை ஆரம்பம்'  என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இங்கு காணலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக