வியாழன், 17 செப்டம்பர், 2015

அமெரிக்க வட்டி விகிதங்களில் மாற்றமில்லை


அமெரிக்க வேலை வாய்ப்பு மற்றும் ஜிடிபி தரவுகள் சாதகமாக இருந்ததால் வட்டி விகிதங்களைக் கூட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


கடந்த இரு நாட்களாக நடந்த மத்திய வங்கி கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்று அறிவித்து விட்டார்கள்.



உலக அளவில் தொடரும் பொருளாதார தேக்கத்தின் காரணமாக இன்னும் வளர்ச்சி அடைந்தால் நல்லது என்று எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த பத்து வருடங்களில் அமெரிக்க வட்டி விகிதங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

இன்னும் அங்கு பேஸ் ரேட் வட்டி பூஜ்யத்திற்கு அருகில் தான் உள்ளது.

நேற்று முன்தினமே சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பதை நிறுத்தி விட்டார்கள். நிகரமாக வெளிநாட்டு நிதி உள்ளே வந்துள்ளது.

இந்த வட்டி விகித மாற்றம் இல்லாததால் இந்திய சந்தை நேர்மறையில் இன்று செல்ல வாய்ப்புள்ளது.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக