சனி, 5 செப்டம்பர், 2015

எதிர்பார்ப்பு அளவு இல்லாத அமெரிக்க வேலை வளர்ச்சி

இன்று சந்தை சரிந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு தான்.

பார்க்க:  அமெரிக்க வட்டி கூடும் வாய்ப்பால் சரிவில் இந்திய சந்தை

இந்த செய்தியை வேறு கோணத்தில் பார்த்தால் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.



எங்கே அமெரிக்கக்காரனுக்கு வேலை கிடைச்சால் நமக்கு முதலீடுகள் கிடைக்காமல் போய் விடுமே என்று எண்ணும் அளவிற்கு தோன்றுவதாக இருந்தது.

ஆமாம். ஒருவருக்கு கிடைக்கும் லாபம் மற்றவருக்கு நஷ்டமாக மாறுகிறது.

இறுதியில் நேற்று தரவுகள் வெளிவந்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வேலை வளர்ச்சி இல்லை.

ஆகஸ்டில் 1,73,000 புதிய வேலைகள் அமெரிக்கர்களுக்கு கிடைத்துள்ளன. ஆனால் இது ஜூலையை விட குறைவாக சென்றது. அதனால் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

ஆனால் ஊதிய வருமானம் 8 சென்ட்கள் மணி நேரத்திற்கு அதிகரித்துள்ளது. அதாவது கடந்த வருடத்தை விட ஒப்பிடுகையில் 2.2% அதிகரித்துள்ளது. ஆனால் ஜிடிபி 3.5% அதிகரித்துள்ள சூழ்நிலையில் ஊதியம் குறைவாகத் தான் அதிகரித்துள்ளது என்ற உணர்வும் உள்ளது.

பெருமளவு திருப்தி தராத இந்த தரவுகளை வைத்து அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை கூட்டுவார்கள் என்று உறுதியாக நம்ப முடியாது. ஆனால் எப்படியும் நடக்கலாம் என்பது தான் தற்போதைய நிலைமை. இனி அங்குள்ள பணவீக்கத்தை கருத்தில் கொண்டு தான் முடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது.

அமெரிக்க சந்தையும் இந்த தரவுகளை நேர்மறையாக எடுத்துக் கொள்ளவில்லை. சந்தை சரிவிலே இருந்தது.

நமது சந்தை ஏற்கனவே கணிசமாக சரிந்து விட்டதால் அடுத்த வாரங்களில் பெருமளவு சந்தை சரியாது என்பதே கணிப்பாக உள்ளது. பார்ப்போம்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக