கடந்த வாரம் சந்தை சரிவின் போதே ஐபிஒக்களின் டிமேண்ட் குறைய வாய்ப்புள்ளது என்று எழுதி இருந்தோம்.
பார்க்க: நேற்றைய சரிவால் ஐபிஒக்களின் மவுசு குறைய வாய்ப்பு
தற்போது அந்த அனுமானம் நிஜமாகி உள்ளது.
சந்தையில் நல்ல பங்குகள் அதிக தகவல்களுடன் மலிவான விலையில் கிடைக்கும் போது ஐபிஒக்களின் ப்ரீமியம் என்பது பெரிதளவு லாபமல்ல.
வேறு ஐபிஒக்களின் முதலீடு செய்யும் பணம் ஒரு அரை மாதத்திற்கு லாக் ஆகி இருக்கும். கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்துடனே காத்திருக்க வேண்டும்.
அதனால் ஓபன் மார்கெட்டில் மலிவாக கிடைக்கும் பங்குகளைத் தான் விரும்புவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
அதன்படி, Power Mech IPOவின் பங்கு மதிப்பு பட்டியலில் குறிப்பிட்ட தொகையை விட கீழே சென்றது. தற்போது பிரபாத் டையரி என்ற நிறுவனம் தனது பங்கு மதிப்பை ஏற்கனவே சொன்னதை விட குறைத்துள்ளது.
இதே போல் Navkar, Pushkar, Pennar போன்ற ஐபிஒக்களை கிரே சந்தையில் வாங்குவதற்கு ஆள் இல்லை. விற்கத் தான் தயாராக உள்ளனர். இதனால் அவற்றின் ப்ரீமியம் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது.
இதனால் கடந்த இரு வார நிகழ்வுகள் சந்தையையே புரட்டிப் போட்டு விட்டது. ஐபிஒ பதிவு செய்த நிறுவனங்களுக்கு இது ஒரு எதிர்பாராத நிகழ்வு தான்.
நமது வாசகர்களுக்கு புதிய ஐபிஒக்களில் முதலீடு செய்வதை அடுத்த ஓரிரு மாதங்கள் முற்றிலுமாக தவிர்க்கலாம் என்று பரிந்துரை செய்கிறோம். அதனை விட நல்ல பங்குகளை இரண்டாவது கட்ட விற்பனை சந்தையிலே (Secondary Market) பெறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக