செவ்வாய், 8 செப்டம்பர், 2015

புதிய கேஸ் இணைப்பு எடுக்க இன்டர்நெட் மூலம் எளிய வழி

புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)


இது கேஸ் இணைப்பு பெறுவதில் எமது சொந்த அனுபவம்.



பெங்களூரில் இந்திரா நகரில் குடியிருக்கும் போது ஒரு எச்பி கேஸ் இணைப்பு பெற்றிருந்தோம்.

அதன் பிறகு அபார்ட்மென்ட் வாங்கி புதிய இடத்திற்கு மாற வேண்டி இருந்தது. ஆனால் அபார்ட்மென்ட் சிட்டியை விட்டு வெளியே இருந்ததால் யாரிடம் போய் கேட்பது குழப்பமாக இருந்தது.

அதே எச்பி டீலரிடம் கேட்டால் அவர் மடிவாளாவை சொன்னார். சரி மடிவாளா அலுவலகத்தைக் கேட்டால் இன்னொரு எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி அலுவலகத்தைக் கை காட்டினார்கள்.

அவங்க கிட்ட பாரத்தை எல்லாம் நிரப்பி கொடுத்து விட்டு வந்தால் ஒரு வாரம் கழித்தும் எந்த தகவலும் காணோம்.

கடைசியில் என்னவென்று போய் கேட்டால் உங்க ஏரியாவிற்கு எச்பி டெலிவெரி எல்லாம் கிடையாது என்று சொன்னார்கள். பாரத் ஏஜென்சியை போய் பாருங்கள் என்று சொன்னார்கள்.

இதை முதலிலே சொல்லி இருக்கலாம் என்று வெறுப்போடு பாரத்தில் சென்று இணைந்தோம்.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இருக்கும். எல்லாம் எல்லா இடத்திலும் இருக்கும். ஆனால் ஒருங்கிணைப்பு இல்லாததால் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு கூட தகவல்கள் தெரிவதில்லை.

நாம் தான் ஒரு கேஸ் கனெக்சன் எடுப்பதற்கு ஆபீசிற்கு லீவ் போட்டு அலைய வேண்டும்.

இந்த மோசமான அனுபவத்தின் காரணமாக தற்போது ஒரு செய்தியை பார்த்த பிறகு நல்ல இருங்கப்பா என்று கும்பிட தோன்றியது.

ஆமாம். தற்போது அணைத்து கேஸ் நிறுவனங்களின் டீலர்களையும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைத்துள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் Sahaj LPG.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்,
  1. முதலில் http://mylpg.in/docs/KYC.pdf என்ற இணைப்பில் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு mylpg.in என்ற தளத்தில் சென்று நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தையும், தேவையான அடையாள அட்டைகளையும் ஸ்கேன் செய்து ஏற்றிக் கொள்ள வேண்டும்.
  3. அடுத்த இரண்டு நாட்களில் தானாகவே உரிய டீலர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஐடியும் மின் அஞ்சலில் கொடுப்பார்கள். 
  4. ஐடி கிடைத்த பிறகு ஆன்லைனில் புதிய இணைப்பிறகு தேவையான கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
  5. அதன் பிறகு மூன்று அல்லது நான்கு நாட்களில் டீலர் வீட்டிற்கு வந்து சிலிண்டரை கொடுத்து செல்வார்.
ஆக, மொத்தம் ஒரு வாரத்தில் நமக்கு தேவையான இணைப்பு வீட்டை விட்டு வெளியே செல்லாமலே கிடைத்து விடும்.



அதிலும் டீலர்களுக்கு தேவையற்ற லஞ்சம் கொடுப்பதும் இதனால் ஒழியும்.

நடைமுறையில் கொஞ்சம் தாமதமானாலும் ஒரு நல்ல எளிய வழிமுறையாக மாற வாய்ப்புள்ளது.

மோடி அரசின் இத்தகைய டிஜிட்டல் தொடர்பான திட்டங்கள் வரவேற்கத்தக்க ஒன்றே!



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக