ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்க தரவுகள் நேற்று சந்தையைக் குளிர செய்தது.
இந்த தரவுகள் படி, மொத்த வியாபரத்திற்கான பணவீக்கம் -4.05% என்பதிலிருந்து -4.95% சதவீதமாக குறைந்துள்ளது.
ரிசார் வங்கி பல மாதங்களாக பணவீக்கம் குறைந்தால் வட்டி விகிதத்தைக் குறைப்போம் என்று சொல்லி வருவதால் சந்தையில் இந்த தரவுகள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதனால் சந்தை 200 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஆனால் ரிசர்வ வங்கி பொதுவாக மொத்த பணவீக்கத்தைக் கணக்கில் கொள்வதில்லை. சில்லறை வியாபர பணவீக்கத்தைத் தான் கருத்தில் கொள்ளும்.
அதுவும் நேற்று மாலை வெளியான நிலையில் 3.66% சதவீதமாக குறைந்தது. அதிலும் கச்சா எண்ணெய் தொடர்பான பொருட்கள் 21% விலை குறைந்து குறைந்த பணவீக்கத்தைக் காட்டியுள்ளன.
ராஜன் நான்கு சதவீதம் பணவீக்கத்தை ஒரு இலக்காக வைத்து இருப்பதால் கண்டிப்பாக செப்டம்பர் 29 அன்று கூடும் கூட்டத்தில் வட்டியைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆனாலும் இப்படியே சென்றால் பணவீக்கம் மக்களிடையே பணபுழக்கம் இல்லாத பணவாட்டம் என்ற நிலைக்கு சென்று விடுமோ என்ற பயமும் சந்தையில் உலவி வருகிறது.
கடந்த வருடம் 100 ரூபாய்க்கு விற்ற ஒரு பொருள் 95 ரூபாய்க்கு சென்றால் மக்களிடையே தேவை குறைந்து உள்ளது என்று அர்த்தம் கொணரலாம்.
அவ்வாறு தேவை குறைந்துள்ளது என்றால் வாங்கும் சக்தி குறைந்துள்ளது அல்லது பயத்தின் காரணமாக சிக்கனத்தில் செல்ல மக்கள் விரும்புகிறனர் என்று கருதலாம்.
மொத்தத்தில் இது பணப்புழக்கத்தை குறைத்து நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்க வேண்டிய நிலை வரலாம். அப்படி விற்றால் லாபம் பாதிக்கும். இதனால் தொழில் துறைக்கு பின்னடைவு ஏற்படும்.
அதனால் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று பல முனையில் இருந்து வேண்டுகோள்கள் செல்கின்றன.
வட்டியைக் குறைத்து மக்களை வாங்க வைத்து விடுவார்கள். அதே நேரத்தில் வட்டி குறைவாக சென்றால் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கு குறைந்த வட்டி கொடுத்தால் போதும்.
இப்படி இரு முனையில் இந்த வட்டிக் குறைப்பு ஆதாயம் கொடுப்பதால் சந்தை உற்சாகத்தில் இருக்கிறது.
பணவாட்டம் பற்றி மேலும் அறிய பார்க்க:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக