வியாழன், 3 செப்டம்பர், 2015

அமெரிக்க வட்டி கூடும் வாய்ப்பால் சரிவில் இந்திய சந்தை

இன்று சந்தை காலையிலே 500 புள்ளிகள் குறைவுடன் ஆரம்பித்துள்ளது.


நமது காரணிகள் வலுவாக இல்லாத சூழ்நிலையில் உலகில் என்ன நடந்தாலும் நமது சந்தை கொஞ்சம் ஆட்டம் காணத் தான் செய்யும்.இன்று அமெரிக்க வேலை வாய்ப்பு வளர்ச்சி தொடர்பான தரவுகள் வெளிவரும் நாள்.

அவ்வாறு வரும் தரவுகள் நல்ல முறையில் வந்து விட்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் நல்ல நிலையில் செல்கிறது என்று அவர்கள் மத்திய வங்கி கருதுகிறது.

அந்த நிலையில் அடுத்த வாரம் கூடும் மத்திய வங்கி கூட்டத்தில் அமெரிக்க வட்டி விகிதங்களைக் கூட்டவும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு வட்டி கூட்டப்பட்டால் அமெரிக்க பத்திரங்களில் அதிக வட்டி கிடைக்கும். அமெரிக்க பொருளாதாரம் உயர்கிறது என்றால் பாதுகாப்பான சந்தையில் அங்கே முதலீடு செய்யலாம் என்று கருதுபவர்கள் அதிகம்.

இதனை வெகு காலமாக எதிர்பார்த்து இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கள் முதலீடுகளை நமது சந்தையில் இருந்து திரும்ப பெற்று வருகின்றனர்.

இது போக, நமது ஊரில் மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்பதும் ஒரு காரணம். ஆனால் இன்றைய சரிவிற்கு அது ஒரு காரணமல்ல.

மற்றொன்று, இந்திய சந்தை மேலும் சரியும் என்ற பயத்தில் சில்லறை முதலீட்டாளர்களும் பங்குகளை இன்று விற்க ஆரம்பித்து விட்டனர். இது போக, தற்போது குறுகிய கால வர்த்தகம் செய்பவர்கள் கை ஓங்கி உள்ளது.

இதனால் தான் இன்றைய சந்தை தாழ்வு எதிர்பார்ப்பை விட அதிகமாக உள்ளது.

ஆனாலும் மிக அதிகமாக இந்திய சந்தை சரிகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வாங்கிப் போடுவது சரியாக இருக்கும்.

அடுத்த ஒரு வருடத்திற்குள் முதலீடு செய்த காசு திரும்ப வேண்டும் என்றால் தற்போதைய சந்தையில் இருந்து விலகி இருப்பது நல்லது.

அதே நேரத்தில் இரண்டு, மூன்று வருடங்கள் என்ற இலக்கை கொண்டு முதலீடு செய்யலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:
வெறும் நம்பிக்கைக்காக மட்டும் முதலீடு செய்ய முடியாது - ஜிம் ரோகர்ஸ்


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக