புதன், 2 செப்டம்பர், 2015

பங்குகளை பரிமாறிக் கொள்வது எப்படி? (ப.ஆ-45)


பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.

வங்கிகளில் பணத்தை ஒரு கணக்கிற்கு அனுப்புவது போல் பங்குகளையும் மற்றவர் டிமேட் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.



இந்தக் கட்டுரையில் பங்குகளை பரிமாறிக் கொள்வதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

இவ்வாறு பங்குகளை பரிமாறுவதை Transfer of Shares என்று குறிப்பிடுவார்கள்.

பங்குகளை டிமேட் வடிவத்தில் வைத்திருப்பவர்களும், அல்லது காகித பத்திரங்களாகவோ வைத்து இருந்தாலும் கூட மற்றவர்களுக்கு பங்குகளை கொடுத்து கொள்ளலாம்.

இவ்வாறு பங்குகளை பரிமாறிக் கொள்வதை இரு வகையாக பிரிக்கிறார்கள்.

முதலில் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தால் வருமான வரி ஏதும் கட்ட வேண்டாம்.

ஆனால் மற்றவர்களுக்கு கொடுப்பதாக இருந்தால் வருமான வரி காட்ட வேண்டும். அதாவது தாங்கள் அன்பளிப்பாக பெறும் பங்குகளின் மதிப்பு 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமான வரியில் கணக்கு காட்ட வேண்டும்.

அதே வேளையில் திருமணம் போன்ற சில சுபயோக நிகழ்வுகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தால் வரி கட்ட வேண்டாம்.



பங்குகளை எவ்வாறு மாற்றிக் கொள்வது?


டிமேட் வடிவத்தில் வைத்திருப்பவர்கள் Delivery Instruction Slip (DIS) என்ற படிவத்தை டிமேட் கணக்கு வைத்திருக்கும் தரகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதில் பங்குகளை பெறுபவரின் டிமேட் விவரங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். எவ்வளவு பங்குகள், எந்த பங்கு போன்ற விவரங்களையும் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அதே போல் பங்குகளை பெறுபவர் பெற்றதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.



எதிர்காலத்தில் வரி பிரச்சினைகளை சமாளிக்க ஸ்டாம்ப் பேப்பரில் Gift Deed என்ற பெயரில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் காகித வடிவத்தில் பங்குகளை பழைய முறையில் வைத்து இருந்தால் 7B என்ற படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 100 ரூபாய்க்கு 25 பைசா என்ற தொகைக்கு ஸ்டாம்ப் வரி செலுத்த வேண்டும்.

இந்த ஸ்டாம்ப் கட்டணத்தை தவிர்க்க வேண்டும் என்றால் டீமேட் வடிவத்திற்கு பங்குகளை மாற்றிக் கொள்வது நல்லது.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக