கடந்த சில நாட்கள் முன்பு தான் Payment Bank என்று சொல்லப்படும் வணிகத்துடன் இணைந்து செயல்படும் வங்கிகளை அறிமுகப்படுத்தியது.
பார்க்க: Payment Bank எந்த அளவு வங்கித் துறைக்கு பயனளிக்கும்?
அடுத்த கட்டமாக மைக்ரோ பைனான்ஸ் துறையில் இருக்கும் பத்து சிறு வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வங்கிகள் Small Banks என்று அழைக்கப்படும். முதல் கட்ட முதலீடாக 100 கோடி ரூபாய் குறைந்த பட்சம் தேவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மக்களிடம் இருந்து டெபாசிட்களை வாங்கி கொள்ளலாம்.
அதே போல் RBI விதிகளுக்கு உட்பட்டு கடன் வழங்கிக் கொள்ளலாம். ஆனால் அதிகபட்சமாக 25 லட்சம் வரை கடன் வழங்கிக் கொள்ளலாம். 75 சதவீத கடன்கள் ஆர்பிஐ குறிப்பிடும் தொழில் துறைகளுக்கு தான் வழங்க வேண்டும்.
Payment வங்கிகளுக்கு கடன் கொடுக்க அனுமதி இல்லை என்பது தான் இந்த இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசம்.
கூடுதலாக சந்தையில் உள்ள ம்யூச்சல் பாண்ட், இன்சுரன்ஸ், பென்சன் பாண்ட்களை விற்றுக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் வங்கித் துறை சாராத எந்த வியாபாரமும் இந்த வங்கிகிகளுக்குள் செயல்பட கூடாது. அதனால் சுயமாக ICICI, SBI, HDFC போன்று ம்யூச்சல் பாண்ட், இன்சுரன்ஸ் பாண்ட் துறையில் ஈடுபட அனுமதி இல்லை.
இந்த வங்கியின் நிறுவனர்கள் அல்லது ப்ரொமோட்டர்கள் 40%க்குள் தான் தங்கள் பங்குகளை வைத்திருக்க வேண்டும்.
மற்ற வங்கிகள் போல் CRR, SLR போன்ற RBI வட்டி விகிதங்களை கடன் கொடுக்கும் முன் பின்பற்ற வேண்டும்.
பார்க்க: CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?
அனுமதி கொடுக்கப்பட்ட பத்து வங்கிகளில் சென்னையை சார்ந்த Equitas Holdings, ESAF Microfinance and Investments போன்றவை சிறு வங்கிகளாக செயல்பட அனுமதி கிடைத்துள்ளது.
இன்னும் இந்திய மக்களில் பலருக்கு வங்கி சேவைகளின் பலன் கிடைப்பதில்லை. அதனால் ஆர்பிஐ இன்னும் புதிதாக பல வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
பார்க்க: Payment Bank எந்த அளவு வங்கித் துறைக்கு பயனளிக்கும்?
அடுத்த கட்டமாக மைக்ரோ பைனான்ஸ் துறையில் இருக்கும் பத்து சிறு வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வங்கிகள் Small Banks என்று அழைக்கப்படும். முதல் கட்ட முதலீடாக 100 கோடி ரூபாய் குறைந்த பட்சம் தேவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மக்களிடம் இருந்து டெபாசிட்களை வாங்கி கொள்ளலாம்.
அதே போல் RBI விதிகளுக்கு உட்பட்டு கடன் வழங்கிக் கொள்ளலாம். ஆனால் அதிகபட்சமாக 25 லட்சம் வரை கடன் வழங்கிக் கொள்ளலாம். 75 சதவீத கடன்கள் ஆர்பிஐ குறிப்பிடும் தொழில் துறைகளுக்கு தான் வழங்க வேண்டும்.
Payment வங்கிகளுக்கு கடன் கொடுக்க அனுமதி இல்லை என்பது தான் இந்த இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசம்.
கூடுதலாக சந்தையில் உள்ள ம்யூச்சல் பாண்ட், இன்சுரன்ஸ், பென்சன் பாண்ட்களை விற்றுக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் வங்கித் துறை சாராத எந்த வியாபாரமும் இந்த வங்கிகிகளுக்குள் செயல்பட கூடாது. அதனால் சுயமாக ICICI, SBI, HDFC போன்று ம்யூச்சல் பாண்ட், இன்சுரன்ஸ் பாண்ட் துறையில் ஈடுபட அனுமதி இல்லை.
இந்த வங்கியின் நிறுவனர்கள் அல்லது ப்ரொமோட்டர்கள் 40%க்குள் தான் தங்கள் பங்குகளை வைத்திருக்க வேண்டும்.
மற்ற வங்கிகள் போல் CRR, SLR போன்ற RBI வட்டி விகிதங்களை கடன் கொடுக்கும் முன் பின்பற்ற வேண்டும்.
பார்க்க: CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?
இன்னும் இந்திய மக்களில் பலருக்கு வங்கி சேவைகளின் பலன் கிடைப்பதில்லை. அதனால் ஆர்பிஐ இன்னும் புதிதாக பல வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக