ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

துவண்ட சந்தைக்கு சாதகமாக வந்த தொழில் துறை தரவுகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சாதகமான உள்நாட்டுக் காரணி வந்துள்ளது. அதனால் இந்த வாரம் சந்தை கொஞ்சம் உற்சாகத்திலே இருக்கலாம்.


இந்திய தொழிற்சாலைகளின் உற்பத்தி வளர்ச்சியைக் குறிக்கும் குறியீடு Index of Industrial Production (IIP). ஒவ்வொரு மாதமும் இந்த தரவுகள் வெளியிடப்படும்.





ஜூலை மாதத்திற்கான இந்த தரவுகள் கடந்த வெள்ளியன்று வெளியானது.

நிதி நிறுவனங்கள் 3.5% அளவே வளர்ச்சி இருக்கும் என்று கணித்து இருந்தன. ஆனால் எதிர்பார்ப்பையும் மீறி 4.5% வளர்ச்சி கொடுத்து இருந்தது.

இதில் உற்பத்தி துறை 4.7% வளர்ச்சி கொடுத்து இருந்தது. சுரங்க துறை 1.3% வளர்ச்சியும், மின்சார உற்பத்தி துறை 3.5% வளர்ச்சியும் கொடுத்து இருந்தது.

இதில் இன்ஜினியரிங் துறை 10.6% வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஆறு மாதத்தில் இல்லாத வளர்ச்சியாகும். இன்ஜினியரிங் துறை மீண்டு வரும் வாய்ப்பாக இதனைக் கருதலாம்.

அதே நேரத்தில் கற்கள் மற்றும் நகை உற்பத்தி 156% வளர்ச்சி அடைந்துள்ளது முக்கிய விடயம்.

மொத்தமாக உள்ள 22 துறைகளில் 12 துறைகள் நேர்மறை வளர்ச்சி கொடுத்து இருந்தது குறிப்பிட்டத்தக்கது.

சந்தை ஒரு வித நெருக்கடியில் இருக்கும் சூழ்நிலையில் இந்த தரவுகள் வந்து ஆறுதலைக் கொடுத்துள்ளது என்று கருதலாம். நமது அடிப்படைகள் இன்னும் நன்றாகவே இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்த தரவுகள் தருகிறது.

இதனால் இந்த வாரத்தில் சந்தை ஒரு வித நம்பிக்கையுடன் உலகக் காரணிகளை எதிர்த்து தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக