வியாழன், 24 செப்டம்பர், 2015

சீனாவால் தடுமாறும் டாடா கார் விற்பனை

டாடா குழுமத்தின் ஒரு முக்கியமான அங்கம் டாடா மோட்டோர்ஸ்.


கடந்த காலங்களில் இந்தியாவில் வணிகத்திற்கு பயன்படும் வாகனங்கள் மற்றும் கார் போன்றவற்றில் அவர்கள் பங்களிப்பு மிகப் பெரியது.



ஆனால் அண்மையில் இண்டிகா அளவிற்கு அவர்கள் கார் மாடல்கள் பிரபலமாகவில்லை. இதனால் உள்நாட்டு கார் விற்பனையில் அவர்கள் பங்களிப்பு சுருங்கி போனது.

அத்தோடு சீனாவிலும் பொருளாதர தேக்கம் ஏற்பட்டதால் அங்கு பிரபலமான ஜேக்குவார் கார்களின் விற்பனை பாதிக்கப்பட்டது.

இதற்கு மேலாக  சீனாவில் இறக்குமதி செய்யப்பட ஜேக்குவார் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்ட துறைமுக நிலையம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் 5000 ஜேக்குவார் கார்கள் ஒரே நேரத்தில் எரிந்து போனது.

இந்த எதிர்மறை செய்திகள் அவர்கள் பங்கிலும் எதிரொலித்தது. இந்த வருட தொடக்கத்தில் 650 அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு தற்போது 300க்கு அருகில் வந்து விட்டது.

கடந்த வருடம் முழுவதும் நஷ்டத்தைக் கொடுத்து வந்ததால் அதன் அடிப்படையில் மதிப்பீடலை பார்க்க முடியவில்லை.

ஆனால் கடந்த காலாண்டு முதல் லாபம் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். அதனால் அடுத்த வருடம் வரும் வருமானம் அடிப்படையில் பார்த்தால் P/E மதிப்பு ஏழு அளவில் வருகிறது. இது மற்ற கார் நிறுவனங்களை விட மிக மலிவான விலையில் வருகிறது.

அதனால் மதிப்பீடலில் இந்த பங்கு நன்றாக உள்ளது.

ஆனாலும் உள்நாட்டு கார் விற்பனையில் வந்துள்ள புதிய மாடல்கள் பெரிய அளவில் சோபிக்க வில்லை. இந்த தொழிற்சாலைகள் 25% அளவே பயன்படுத்தப்படுகின்றன. கமெர்சியல் வாகனங்களை மட்டுமே நம்ப வேண்டி உள்ளது.

அதனால் இன்னும் வளர்ச்சி மந்தமாக இருக்கும் என்றே கணிக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் வளர்ச்சி என்பது இந்த பங்கிற்கு பாதகமாக உள்ளது.

அதனால் இன்னும் 10% கீழே வந்தால் ஒரு குறுகிய கால லாபம் பார்க்க இந்த பங்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் நீண்ட காலத்திற்கு இன்னும் ஏற்றதல்ல.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக