புதன், 2 செப்டம்பர், 2015

முதலீடு கட்டுரைகளை நகல் எடுக்கும் முன்..

நண்பர்களே!

எமது தளத்தின் கட்டுரைகள் நகல் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தளங்களில் பயன்படுத்தப்படுவதை நண்பர்கள் மூலம் அறிகிறோம்.


எமது நேரம், ஆய்வு, உழைப்பு போன்றவற்றை செலவிட்டு கட்டுரைகளை எழுதி வருகிறோம்.ஆனால் முதலீடு தளம் குறித்த விவரங்கள் நீக்கப்பட்டு நகலாக பயன்படுத்தும் போது ஒரு வித கவலையுணர்வு மிஞ்சுகிறது.

டெக்னிக்கலாக நகல் எடுப்பதைத் தடுப்பதற்கு சில வழிகள் இருந்தாலும், அவ்வளவு கட்டுப்பாடுகள் வைத்து இயங்குவது ஒரு நல்ல தளத்திற்கு சரியாக அமையாது. மேலும் அது பல வழிகளில் எமது வாசகர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

எமது தள இணைப்பு தெரியுமளவு கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டால் வருத்தங்கள் ஏதுவுமில்லை.

அதனால் பிற வலைத் தளங்களில் பிரசுரிக்கும் முன்னர் muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நட்புடன்,
முதலீடு

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக