ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வாய்மொழி உத்தரவுகளால் ஒரே ரேங்க், ஒரே பென்சனில் குழப்பம்

ராணுவ வீரர்களின் கோரிக்கையான ஒரே ரேங்க், ஒரே பென்ஷன் கொள்கை ரீதியாக அரசு ஏற்றுக் கொண்டது.

ஒரே ரேங்க், ஒரே பென்ஷன் என்பது என்ன என்று அறிய ராணுவத்தில் பணிபுரியும் ராஜா அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.

ராணுவத்தில் ஒரே ரேங், ஒரே பென்சன் - ஒரு விரிவான பார்வை




நேற்று முன்தினம் இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவித்தார்.

அவரது அறிவிப்பின் படி,

ராணுவத்தில் முழுவதும் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் போரில் கணவனை இழந்த விதவைகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

அவர்களது பென்ஷன் தொகை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்.

ஆனால் இந்த அறிவிப்பு ஓய்வு காலத்திற்கு முன்னரே விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ராணுவத்தில் ஒரு கணிசமான பகுதியினர் ஓய்வு காலத்திற்கு முன்னரே விருப்ப ஓய்வு பெறுவதால் உண்ணாவிரதம் இருக்கும் முன்னாள் ராணுவத்தினர் இந்த அறிவிப்பை ஏற்க வில்லை.

அதனால் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

ஆனால் நேற்று பிரதமர் ஒரு கூட்டத்தில் வைத்து விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று அறிவித்தார்.

இதனை ஏற்று உண்ணாவிரதம் வாபஸ் வாங்கப்பட்டது.

ஜெயலலிதா தான் 110ன் கீழ் விதியின் தாம் தான் சில அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று சிலவற்றை செய்வார்.

தமிழக மக்களுக்கு பரிச்சயமான இந்த முறையை மோடி அகில இந்தியா அளவில் நடைமுறைப்படுத்துகிறார் என்றே தெரிகிறது.

சில முக்கிய அரசு முடிவுகள் எழுத்து பூர்வமாக வழங்கப்படுவது தான் சரியானது.

அதை விட்டு மந்திரி ஒன்று சொல்வதும், பிரதம மந்திரி திருத்தி சொல்வதும் குழப்பத்தை தான் கொடுக்கும்.

இது வரை வந்த அறிவிப்பின் படி, இந்தக் கொள்கை ஏற்கப்பட்டது. ஆனால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை.

அடுத்து, பாரா மிலிட்டரியில் இருப்பவர்கள் தங்களுக்கும் இந்த முறை அமலாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இது பற்றி நாம் கருத்தை கூறுவதை விட அந்த துறையில் இருப்பவர்கள் கருத்துக்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக