புதன், 27 மே, 2015

கற்றதும், பெற்றதும் ஒரு புத்தக விமர்சனம்

சுஜாதாவை தெரியாமல் இருக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் அறிமுகம் செய்யும் அவசியம் நமக்கு இல்லை.


அவர் எழுதிய ஒரு புத்தகம் தான் கற்றதும், பெற்றதும். அதனை படித்த அனுபவங்களை பகிர்கிறோம்.பணம், பங்குச்சந்தை என்று அலைந்து கொண்டால் புத்தி பேதிலித்து விடும். அதனால் அதையும் தாண்டிய ஒரு பதிவை பார்ப்போம்.

முந்தைய காலத்தில் அனிதாவின் காதல்கள் என்று சுஜாதாவின் நாவல்களை தான் படித்தது உண்டு.

அந்த எதிலும் இல்லாத ஒன்று அவரது கற்றதும், பெற்றதும் புத்தகத்தில் காண முடிந்தது.


பார்க்க:
வரலாற்றை வேகமாக திருப்பி பார்க்கும் "கி.மு, கி.பி"

ஒரு மினி என்சைக்ளோ பீடியா தான் அவரும் அவரது புத்தகமும்.

பள்ளியில் அறிவியல் என்றால் போரடிக்கும் நமக்கு கற்றதும், பெற்றதும் புத்தகம் சலிப்பை தரவில்லை.

அதற்கு பத்தி பத்தியாக எழுதாமல் சுருங்க கூறி விளங்க வைக்கும் எளிதான நடைமுறையே முக்கிய காரணம் என்று கருதலாம்.

விகடனில் தொடராக எழுதி வந்தது கற்றதும், பெற்றதும் என்று புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஏன் பருவம் அடைந்தவர்களுக்கும் கூட இந்த புத்தகத்தை பரிசாக கொடுக்கலாம்.

ரோபோவில் இருந்து விண்வெளி வரை பல விடயங்கள் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. இடையில் ஹைக்கூ கவிதைகள், சுஜாதாவின் நக்கல்கள், அனுபவங்கள் என்று சுவராஸ்யமாகவே செல்கிறது.

இரண்டு பாகங்களையும் இரண்டு வாரத்தில் படித்து முடித்து விட்டோம். அந்த அளவு நன்றாகவே உள்ளது.

இன்னும் தமிழ் அறிவியல் எழுத்துலகுக்கு அவர் விட்டு சென்ற இடம் காலியாகவே உள்ளது என்றும் கூறலாம்.

கீழ் உள்ள ஆன்லைன் இணைப்புகளில் இந்த புத்தகங்கள் கிடைக்கிறது.

மற்றதொரு புத்தக விமர்சனம்
வரலாற்றை வேகமாக திருப்பி பார்க்கும் "கி.மு, கி.பி"

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. இந்த புத்தகத்தையும் , சுஜாதாவின் மேலும் பல புத்தகங்களையும் pdf ஆக இலவசமாக பெற.....

    http://jagadeesktp.blogspot.in/2009/11/blog-post_5533.html?m=1

    பதிலளிநீக்கு