கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தையில் கடுமையான வீழ்ச்சி நிறைந்து இருந்தது.
கடந்த ஒன்றரை வருடங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு நீண்ட நாள் வீழ்ச்சியில் இருந்த சரிவு என்பதால் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.
எமக்கெல்லாம் கிடைத்த லாபத்தில் 10% அளவிற்கு கீழே தள்ளியது.
அதிலும் மிட் கேப் மற்றும் சிறு நிறுவன பங்குகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.
ஆனால் இந்தவொரு சூழ்நிலை சராசரியாக்கும் வாய்ப்பு என்று கருதி வீழ்ந்த பங்குகளில் முதலீட்டினை அதிகரித்து சென்றோம்.
கடந்த வாரம் மற்றும் இன்றைய உயர்வுகள் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தன என்று சொல்லலாம்.
மீண்டும் இதே போன்று திருத்தங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றன.
ஆனால் இந்த சூழ்நிலையில் தாழ்வு நிலையின் எல்லை புரிந்திருப்பது தான் நமக்கு சாதகமான விடயம்.
சந்தை கீழே விழுந்த போது இன்னும் கீழே செல்லும் என்று குதித்த மீடியாக்கள் இன்று கெட்ட காலம் முடிந்துள்ளது என்று சொல்ல ஆரம்பித்துள்ளன.
இது மீடியாக்களின் வழக்கம் தான். எங்கே கூக்குரல் அதிகமாக இருக்கிறதோ அங்கு சாய்வது இயல்பு.
ஐடி நிதி நிலை முடிவுகள் மோசமாக சென்ற பிறகு இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டதாக தோற்றம் வந்தது .
ஆனால் ஐடி இந்திய பொருளாதரத்தில் 10% அளவு மட்டும் தான் வருகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
தற்போது சந்தை ஆட்டோ, உலோகம், வங்கிகள் போன்ற துறைகள் சேர்ந்து தற்போது சந்தையை மீட்டுள்ளன.
இதற்கு நிலக்கரி சுரங்க ஏலங்கள் முறையாக நடைபெற்றது, வங்கிகளின் வாராக்கடன்களில் ஏற்பட்டுள்ள சிறு மாறுதல்கள், வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து உள்ளது போன்ற காரணங்களை குறிப்பிட முடியும்.
இதில் நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக வேகமாக சில முடிவுகளை எடுத்தது மோடி அரசின் சாதனைகளில் ஒன்றாக கூட குறிப்பிட முடியும்.
இன்னும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாய் சரிவடைவது என்பது சவாலான விடயம்.
அதே போல் கடந்த வாரம் வெளிநாட்டு முதலீட்டளார்களுக்கு குறைந்த கால லாப வரி விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சந்தையை விட்டு விலகி சென்றார்கள்.
தற்போது அரசு அப்படி எல்லாம் வரி கொடுக்க தேவையில்லை என்று சொல்லியிருப்பதால் பங்குகளை விற்பதை குறைத்துள்ளார்கள். இதுவும் சந்தை மேலும் சரிவடையாமல் இருக்க ஒரு காரணம்.
அடுத்து சீனாவிற்கு அதிக அளவு முதலீடுகள் திருப்பி விடப்பட்டுள்ளது. அங்கு 200 பில்லியன் டாலர் அளவு IPOக்கள் வெளிவருவதும் ஒரு காரணம்.
இதனால் பல சந்தைகளில் இருக்கும் பணத்தை எடுத்து அங்கு முதலீடு செய்து வருகிறார்கள்.
ஆனால் IPO வெளிவந்த பிறகு இந்த பணம் மீண்டும் நமது சந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
அந்த சமயத்தில் கணிசமான பணம் திரும்பும் போது மீண்டும் சென்செக்ஸ் 30000 முதல் 31000 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.
அதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் கூட ஆகலாம்.
ஆனால் எமது வாசகர்கள் நீண்ட கால முதலீட்டை விரும்புவர்கள் என்ற நம்பிக்கையில் வாங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
தற்போதைய சந்தையில் முதலீடு செய்தால் அடுத்த இரண்டு வருடங்களில் 40% முதல் 50% வரை ரிடர்ன் பெறலாம்.
இந்த நோக்கில் தான் எமது மாதாந்திர கட்டண போர்ட்போலியோ தேதியை மே 16 அன்று குறிப்பிட்டு இருந்தோம். நல்ல சமயமாக வாய்த்து உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் விபரங்களை பெறலாம்.
இந்த இணைப்பில் மே போர்ட்போலியோ அறிவிப்பு விவரங்களையும் பெறலாம்.
மே '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக