செவ்வாய், 12 மே, 2015

ஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் சந்தை

தலைப்பை பார்த்து விட்டு நமது தளம் அதிமுக தளமாக மாறி விட்டர்கள் என்று நினைத்து விடாதீர்கள்!


சந்தை நிலவரத்தை சொல்வதற்காக அப்படி சொன்னோம்.



தற்போது சந்தை வீழ்ச்சி அடைவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுவது பல மசோதாக்கள் பார்லிமெண்டில் தேங்கி கிடைப்பதும் ஒன்று.

இதற்கு லோக்சபாவில் பெரும்பான்மையாக இருக்கும் பிஜேபி ராஜ்யசபாவில் ஒரு உதிரி கட்சியாகவே உள்ளது ஒரு காரணம்.

ஆமாம். 123 ஓட்டுக்கள் தேவை என்றால் அவர்களிடம் இருப்பது 60க்கும் கூட தான்.

இப்படி கிட்டத்தட்ட 13 மசோதாக்கள் காத்து இருப்பில் உள்ளன. இந்த மசோதாக்களில் பெரும்பான்மை பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் பங்குச்சந்தையுடன் நெருங்கிய தொடர்பு உடையவை.

இதில் நில மசோதா தவிர்த்து மற்ற பெரும்பாலானவை வெறும் அரசியல் காரணங்களுக்காகவே முடங்கி கிடக்கின்றன. அதில் GSTயும் முக்கியமானது.

மோடி அப்படி செய்வார் இப்படி செய்வார் என்று இவ்வளவு நாள் பார்த்த வெளிநாட்டுக் காரர்கள் இந்தியாவே இப்படித் தான் என்று நினைக்க தொடங்கி விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் அதிமுகவிடம் இருக்கும் 12 எம்பிக்கள் ராஜ்யசபாவில் மொக்கை கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு தலை ஓட்டும் முக்கியத்துவம் பெறுகிறது.

பிஜேபிக்கு அதிக இணக்கமாக கட்சி அதிமுக என்பதால் அவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறார்கள். பிஜேபி வழக்கிற்காக பரிகாரம் செய்ததற்கு 'பதில் பரிகாரம்' செய்வார்கள் என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.

இவர்களுடன் மம்தா போன்றவர்களையும் சேர்த்து விட்டால் மைல் கல்லை எட்டி விடலாம்.

நம்ம சந்தைக்கு யார் உள்ளே இருக்கிறார்கள். வெளியே இருக்கிறார்கள் என்று கவலை இல்லை. மசோதாக்கள் நிறைவேற வேண்டும்.

அந்த வகையில் அம்மா விடுதலையை ரத்தத்தின் ரத்தங்களுடன் சந்தையும் வரவேற்கிறது!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக