திங்கள், 11 மே, 2015

ஜெயலலிதாவால் வருமான வரி செலுத்துபவருக்கு கிடைக்கும் டிப்ஸ்

நேற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.


அதனை அரசியல் ரீதியாக நாம் விமர்சனம் செய்யாமல் நீதிபதியின் தீர்ப்பை பொருளாதார அடிப்படையில் மட்டும் பார்ப்போம்.அதில் வருமான வரி செலுத்தும் நமக்கு தோதுவாக நீதிபதி ஒரு தகவலை கொடுத்துள்ளார்.

90களில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடி என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் அவர் ஆட்சி செய்த ஐந்து வருடங்களில் 34 கோடி அளவிற்கு வருமானம் காட்டி உள்ளார்.


ஆனால் உண்மையான வருமானம் 37 கோடி அளவு என்று வருகிறது.

இந்த மூன்று கோடி இடைவெளி என்பது மொத்த வருமானத்தில் 8% அளவே வருகிறது.

இதற்கு முன் ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற வழக்குகளில் 10%க்கும் குறைவான வருமானத்திற்கு கணக்கு காட்டாமல் இருப்பதில் தவறில்லை என்று கோர்ட் கூறி உள்ளது.

அதனால் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு உள்ளார்.

இதனால்,

நமக்கும் 10 லட்ச ரூபாய் வருமானம் வந்து அதில் ஒரு லட்சத்திற்கு கணக்கு காட்டா விட்டால் ஐடி அதிகாரிகள் நம்மை மிரட்ட முடியாது என்பதையும் கவனிக்க.

நோட் தீஸ் பாயின்ட்ஸ் யுவர் ஆனர்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக