NESTLE நிறுவனம் தான் குறுகிய நேரத்தில் தயாராகும் மேகி நூட்லஸ் தயாரித்து வருகிறது.
வெந்நீர் ஊற்றினால் அல்லது ஓவனில் வைத்தாலே உணவு தயாராகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நூட்லஸ் கண்டுபிடித்தவர் பெயரே ஐரோப்பாவை சேர்ந்த மேகி. அந்த பெயர் தான் இந்த பிராண்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் கடுமையான விளம்பர செலவுகள் செய்தும் மேகியை இந்தியாவில் பிரபலப்படுத்த முடியவில்லை. அதன் பிறகு செய்த சர்வேயில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று அறிந்தார்கள்.
குழந்தைகளைக் குறி வைத்து விளம்பரம் செய்த போது தான் இந்த பிராண்ட் பிரபலமானது. தற்போது குழந்தைகள் அழுதாலே 'மேகி செய்து தருகிறேன்' என்று சமாதானம் செய்வதற்கும் மேகி உதவி வருகிறது.
ஏற்கனவே மேகியில் தேவையில்லாத வேதிப்பொருட்கள் கலக்கிறார்கள் என்று புகார் வந்து கொண்டு தான் இருந்தது.
ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமலே இருந்தது.
தற்போது தான் உத்திரபிரதேசத்தில் முதல் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவு, அதாவது உப்பு அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாக இருப்பதாக கணடறிந்து உள்ளார்கள்.
இதனால் ஏற்கனவே கடைகளில் உள்ள மேகி பாக்கெட்களை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளார்கள். அது போக மேலும் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்கள்.
NESTLE நிறுவனம் தாங்கள் நன்றாக பரிசோதிப்பதாகவும், காற்றில் உள்ள சோடியம் வியாபரத்தின் போது கலந்து இருக்கலாம் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.
இதனை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டத்திற்கு விட்டு விடலாம்.
இதை பார்த்து குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் சோதனை பண்ண உத்தரவிட்டு உள்ளார்கள்.
அப்படியே விசாரணைக்கு வந்து ஒன்றும் இல்லை என்று முடிவானால் கூட இந்த நெகடிவ் பப்ளிசிட்டி வியாபரத்தை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதனால் NESTLE பங்கை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக