புதன், 27 மே, 2015

பொய்த்த நிதி அறிக்கைகளால் டல்லாக பங்குச்சந்தை

ஒரு வாரமாக பங்குச்சந்தையைப் பார்த்தால் அப்படியே ப்ளாட்டாக உள்ளது. 10, 15 புள்ளிகளே கூடி இறங்கி வருகிறது.


இதற்கு மாதக் கடைசி என்பதால் F&O என்பது கூட ஒரு காரணமாக கூறப்பட்டது.

அதையும் தாண்டி பார்த்தால் இந்த வாரம் நிதி அறிக்கைகளை கொடுத்த நிறுவனங்கள் மோசமானதாகவே கொடுத்து இருந்தன.Tech Mahindraவின் வருமானம் 20% கூடினாலும் லாபம் 5% குறைந்தது. இதற்கு பணியாளர் செலவு கணிசமாக கூடியதும், சில நிறுவனங்களை வாங்கியதும் காரணமாக கூறப்பட்டது.

இதனால் 15% அளவு பங்கு ஒரு வாரத்தில் துவைக்கப்பட்டது. இந்த அளவு கீழிறங்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறோம்.

அடுத்து, Tata Motors...வருமானம் 3.% கூடினாலும் லாபம் 56% சரிந்தது. இதில் சில ஒரு முறை செலவுகளும் உள்ளடக்கம்.

இதனால் இந்த பங்கும் சரிவை சந்தித்தது.

அடுத்து ஒன்று GAIL பங்கு..இந்த அரசு பங்கை பார்க்காமலே சொல்லலாம். இவங்க கொண்டு வந்த எந்த திட்டமும் உருப்படியாக செயலாக்கம் பெறாதது ஒரு பெரிய குறை.

 உதாரணம் கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வழியாக வரும் கேஸ் பைப் லைன். திட்டமிடுதல் என்பது இந்த நிறுவனத்திடம் இல்லாத ஒன்று.

இதனால் நிதி அறிக்கையும் வழக்கம் போல் பொய்த்து பங்கும் அடி வாங்கியது.

ஆனாலும் இந்த இடைவெளியில் பிரிட்டானியா, SBI போன்றவற்றின் நிதி அறிக்கைகள் நன்றாகவே இருந்தன என்பது குறிப்பிட்டத்தக்கது.

பார்க்க:


இன்னும் நல்ல நிதி அறிக்கைகள் கொடுத்த பங்குகள் நல்ல விலையில் கிடைக்கத் தான் செய்கின்றன. அதனால் பங்குகளை இனங்கண்டு முதலீடுகளை தொடரலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக