வெள்ளி, 22 மே, 2015

பிரிட்டானியாவின் லாபம் 55% உயர்ந்தது

இந்திய நுகர்வோர் துறையில் பிஸ்கட் மற்றும் பண்டங்கள் தயாரிக்கும் பிரிட்டானியா (BRITANNIA) நிறுவனத்தின் நிதி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.


அதில் மொத்த விற்பனை 14% உயரந்துள்ளது. நிகர லாபம் 55% உயர்ந்துள்ளது.



இது சந்தை எதிர்பார்ப்பை மீறிய மிக நல்ல நிதி அறிக்கையாகும்.

இதனால் பிரிட்டானியா பங்கு இன்று சந்தையில் 8% அளவு உயர்ந்தது.

எமது முதல் போர்ட்போலியோவை இலவசமாக கொடுத்து இருந்தோம். அதில் ஆகஸ்ட் 2013ல் பிரிட்டானியா பங்கையும் பரிந்துரை செய்து இருந்தோம்.

நாம் பரிந்துரை செய்யும் போது பங்கின் விலை. 735 ரூபாய். இன்று பங்கின் விலை 2450 ரூபாய் விலை.

பார்க்க:



அதாவது முதலீடு இரண்டு வருடத்திற்கும் குறிகிய காலத்தில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. (>300%)

நிறுவன அடிப்படைகளை வைத்து முதலீடு செய்தால் குறுகிய கால வர்த்தகத்தை விட அதிக ரிடர்ன் பெற முடியும் என்பதற்கு இதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் இந்த இடைப்பட்ட காலத்தில் நிப்டி 40% அளவு மட்டுமே உயர்ந்துள்ளது என்பதையும் கவனிக்க.

அப்படி என்றால், நிறுவன நிதி அறிக்கைகள் நன்றாக இருந்தால் புள்ளிகளை கண்டு அதிக அளவில் பயப்பட வேண்டாம் என்பதும் தெரிய வருகிறது.

இன்னும் இந்த பங்கினை வைத்துக் கொள்ளலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக