ஓமன் அரசு கொண்டு வரும் ஒமானியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை பல லட்சம் இந்தியர்கள் தாய் நாடு திரும்பும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
அதிக அளவில் கச்சா எண்ணெய் வியாபரத்தை சார்ந்து இருக்கும் நாடுகளில் ஒன்று ஓமன்.
கடந்த ஒரு வருடமாக உலக அளவில் சரிந்து வந்த கச்சா எண்ணெய் பல எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் ஓமன் நாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இது ஓமனில் வேலை இல்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து உள்ளது.
இதனால் ஓமன் அரசு வேலை வாய்ப்புகளில் ஓமன் நாட்டுக் குடிமக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சில சட்டங்கள் கொண்டு வந்தது.
இதன்படி, குறிப்பிட்ட சதவீத அளவு வேலை வாய்ப்புகள் ஓமன் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் பொதுவாக அரபு நாடுகளில் இருப்பவர்கள் வேலை திறன் மீது நிறுவனங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர்கள் கடினமாக உழைக்க மாட்டார்கள். வேலைக்கு சரியாக வர மாட்டார்கள் என்ற அனுபவங்கள் நிறுவனங்களுக்கு உண்டு.
இதனால் அவர்களுக்கு வேலை வழங்க யோசித்ததுண்டு.
ஆனாலும் ஓமன் அரசின் நிபந்தனைகளால் நிறுவனங்கள் பெரிய பதவிகளை அவர்களுக்கு கொடுக்காமல் ஓட்டுனர் போன்ற அறிவு சார்பு இல்லாத வேலைகளை கொடுத்து வந்தனர்.
இதனைக் கண்ட ஓமன் அரசு இனி நிறுவனங்களில் இருக்கும் உயர் பதவிகளிலும் ஓமன் குடிமக்களுக்கு ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது.
இதனால் கிட்டத்தட்ட 7000 உயர் பதவிகளில் இருக்கும் இந்திய அதிகாரிகள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மற்ற பதவிகளில் இருப்பவர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என்றும் அறியப்படுகிறது.
ஆனால் நிறுவனங்கள் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கஷடப்பட்டு வளர்த்த நிறுவனங்களில் திறன் இல்லாதவர்களை நியமிக்க விருப்பம் இல்லாமல் உள்ளனர். இதனால் சில நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை துபாய்க்கும் மாற்றி உள்ளார்கள்.
மீண்டும் கச்சா எண்ணெய் விலை சந்தையில் உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் மீளவும் வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்தால் இந்த நிலை மாறவும் வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக