புதன், 6 மே, 2015

FII வெளியேற்றத்தால் தடுமாறும் பங்குச்சந்தை

நேற்று மட்டும் சந்தை 700 புள்ளிகளுக்கு மேல் சரிவு அடைந்தது.


இதற்கு FII (Foreign Institutional Investors) என்று சொல்லப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவு வெளியேறியது முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

அதற்கு பின் புலத்தில் உள்ள காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் வித்தியாசமாக இருந்தது.சீனாவில் இந்த மாதத்தில் மட்டும் 30 நிறுவனங்களுக்கு பங்குச்சந்தையில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது IPO முறையில் சந்தைக்கு வரவிருக்கின்றன.

IPO என்றால் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மிகக் குறுகிய காலத்தில் 50% லாபம் கூட எளிதில் கிடைக்கும். இந்த வாய்ப்பை விட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மனதில்லை.

அதனால் பல சந்தைகளில் இருந்து பணத்தை எடுத்து சீனா சந்தையில் போட உள்ளார்கள். ஹாங்ஹாங் சந்தை கூட 4% அளவு சரிந்துள்ளது என்பதையும் கவனிக்க.

பொதுவாக IPO முறையில் யாரும் அதிக நாள் முதலீடுகளை வைத்து இருக்க மாட்டார்கள். லாபத்தை பார்த்து விட்டு வந்து விடுவார்கள். அதனால் சென்றவர்கள் மீண்டும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதனால் இது தற்காலிகம் தான்.

இது போக, கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பு, பார்லிமெண்டில் மசோதாக்களுக்கு ஏற்படும் தடுமாற்றங்கள் போன்றவையும் சரிவிற்கு காரணமாக உள்ளன.

மேலே எடுத்து செல்ல போதுமான அளவு நேர்மறை காரணிகள் இல்லாததால் சந்தை தடுமாற்றத்திலே உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்கள் கூட நிலைமை நீடிக்கலாம்.

ஆனால் இதையும் தாண்டி சந்தை மீண்டு வரும் என்று தான் நம்புகிறோம். நீண்ட கால முதலீடுகளுக்கு பல பங்குகள் மலிவாகவே கிடைக்கின்றன.

நிப்டி இன்டெக்ஸ் பார்க்காமல் மதிப்பீடல் அடிப்படையில் இறங்கினால் நிதி அறிக்கையின் அடிப்படையில் பங்கு உயரத்தான் செய்யும்.

அதனால் இரண்டு வருடம் முதலீடு செய்ய தயாராக இருந்தால் தற்போது சந்தையில் பங்குகளை வாங்குங்கள்!

எமது மாதாந்திர போர்ட்போலியோ மே 16 அன்று வெளிவருகிறது. விருப்பமுள்ள நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைப்பிலும் மேல் விவரங்களை பார்க்கலாம்.
மே '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக