வெள்ளி, 8 மே, 2015

ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 6

அறியாமல் நாம் செய்யும் முதலீடுகள் தான் ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் முந்தைய வரலாற்று ஊழல்கள் நமக்கு படிப்பினைகள் என்ற நோக்கத்தோடு ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளை தொடராக தொடர்கிறோம்.


முந்தைய பாகத்தை இந்த இணைப்பில் படித்த பிறகு இங்கு தொடரவும்.
ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா - 5




ஆனால் இவரது மோசடிகள் பல வீரிய விளைவுகளை இந்திய பங்குச்சந்தையில் ஏற்படுத்தி விட்டது.

ஹர்ஷத் மேத்தா மீது 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பலவற்றை நிரூபணம் செய்ய முடியவில்லை.

அவர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை செய்யப்பட்டார். ஆனாலும் தனது சகோதர்கள் மூலம் பங்கு வர்த்தகத்தை தொடர்ந்தார் என்பது வேறு கதை.

இவரது புண்ணியத்தால் ஜனவரி 92ல் 2300 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் மே 92ல் 4500 புள்ளிகளை அடைந்தது.

ஆறு மாதத்தில் நூறு சதவீதம் உயர்வு அடைந்த சந்தை மோசடிகள் வெளிவந்த அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் 2300 புள்ளிகளை அடைந்தது. இப்படி கடும் நஷ்டத்தை ஒன்றும் அறியாத அப்பாவி முதலீட்டாளர்களுக்கும் அளித்தது.



இவர் மூலம் Bank Receipts பெற்ற வங்கிகள் கடுமையான நஷ்டத்திற்கு தள்ளப்பட்டன. கடன் கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை.

இப்படி பணம் கொடுத்த விஜயா வங்கி தலைவர் தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில அப்பாவி வங்கி ஊழியர்களும் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்திய பங்குச்சந்தை மேல் இருந்த நம்பிக்கை முற்றிலுமாக உலக அளவில் தகர்க்கப்பட்டது.

சிறு முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பணத்தை இழந்தனர்.

91ல் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரே வருடத்தில் அவர்கள் அலறி அடித்து ஓடி விட்டார்கள்.

ஆனாலும் நல்ல விதமாக வங்கி கட்டமைப்பில் உள்ள ஓட்டைகள் சரி செய்யப்பட்டன.  Bank Receipts என்ற முறையே ரிசர்வ் வங்கியால் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்திய நிதி கட்டமைப்பு எவ்வளவு வீக்காக இருக்கிறது என்பதும் அப்பொழுது உணரப்பட்டது. வங்கிகளில் தாமதத்தை தடுக்க கணினிமயம் வேகமாக புகுத்தப்பட்டது.

இதில் இன்னொரு விதமாக நமது மீடியாக்களின் சுயரூபம் வெளிப்பட்டது.

டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை தான் இவரது மோசடிகளை கண்டுபிடித்து எழுதியது. அதே பத்திரிகை தான் மீண்டும் பங்குசந்தைகளை பற்றி கட்டுரைகள் எழுத ஹர்ஷத் மேத்தாவை அழைத்தது.

அதன் பிறகு ஹர்ஷத் மேத்தா தனியே இணையதளம் ஆரம்பித்து பங்கு பரிந்துரைகள் கொடுக்கவும் ஆரம்பித்தார். அதற்கும் ஏக வரவேற்பு.

இப்படி மக்களும் மறந்தே போயினர்.

ஆனாலும் அவர் புத்தி மாற வில்லை.

91ல் தனியாக பங்குச்சந்தையை ஏற்றி இறக்கிய அவர் 97ல் ஒரு குழுவாக பங்குச்சந்தையில் மோசடிகள் செய்ய ஆரம்பித்தார். இதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டார்.



இறுதியில் 2001ல் 47 வயதில் மாரடைப்பால் இறந்து போனார். இறக்கும் போது ஆறடி நிலம் கூட அவருக்கு சொந்தமில்லை. அவரது வங்கி கணக்குகள், சொத்துக்கள் என்று அனைத்துமே முடக்கப்பட்டு இருந்தன.

அறிவை மோசமாக பயன்படுத்தி வீழ்ந்தவர்கள் வரலாற்றில் ஹர்ஷத் மேத்தாவிற்கு எப்பொழுதும் இடம் உண்டு.

இயற்கை நியதிக்கு மாறாக குறைந்த காலத்தில் பல மடங்குகளில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகள் சரியான பாடம் தருகிறது. எவரையும் கண் மூடி தொடரக் கூடாது என்பது நமக்கு கிடைக்கும் பாடம்.

தொடர் முடிவடைகிறது...

பொறுமையாக படித்ததற்கும் நன்றி!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான பதிவு..ஆனாலும் கட்டுரை அளவு மிகச்சிறியதாக இருந்தது கவலை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறினால் நிவர்த்தி செய்ய முற்படுகிறோம்.

    பதிலளிநீக்கு
  3. கட்டுரை மிகச் சில நிமிடங்களிலேயே வாசித்து முடிக்கக் கூடியதாக உள்ளது. இதே கட்டுரையை நீங்கள் கொஞ்சம் நீளமாக இரு பகுதியாக வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் இதே துறையில் சாதித்த மற்ற வெற்றியாளர்களின் சுவாரஸ்ய கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்யுங்கள். நன்றி வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. கண்டிப்பாக அடுத்த தொடர் பகுதிகளில் நிவர்த்தி செய்ய முற்படுகிறோம்.!

    பதிலளிநீக்கு