செவ்வாய், 12 மே, 2015

ஏன் MAT வரியைக் கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயப்படுகிறார்கள்?

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வீழ்ந்து வருகிறது. அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.


அதில் முக்கியமானது FII என்று சொல்லப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவு பணத்தை எடுத்துள்ளார்கள்.



இதற்கு சீனா பங்குச்சந்தை ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் மற்றொரு முக்கிய காரணம் MAT என்றதொரு வரி.

இந்த வரி தனி நபர்களுக்கு கிடையாது. பொதுவாக கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது.

ஏன் என்றால்,

கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் முப்பது சதவீத அளவு வருமான வரி கட்ட வேண்டி இருக்கும்.

இந்த வரியைத் தவிர்ப்பதற்காக சில நிறுவனங்கள் லாபத்தின் பெரும்பகுதியை டிவிடென்ட் என்று பங்குதாரர்களுக்கு திருப்பி விடுவார்கள்.

இதே போல் Depreciation போன்ற சில விடயங்களுக்கு வரி இல்லை. இந்த பிரிவுகளில் பெரும் தொகையை கழித்து அரசுக்கு வரி கட்டாமலே எஸ்கேப் ஆகி வந்தனர்.

இந்த நிறுவனங்களை Zero Tax நிறுவனங்கள் என்று கூட சொல்வார்கள்.

பல வருடங்கள் வேடிக்கை பார்த்த நமது அரசு நீங்க எதுலயும் கழித்துக்கங்க. ஆனால் கழிப்பதற்கு முன்னால் கணக்கு செய்த லாபத்தில் குறைந்த பட்ச வரி கட்டி விட வேண்டும் என்று சொன்னார்கள்.

அதுவும் இந்த புதிய வரி 1997ல் தான் நடைமுறைக்கு வந்தது.

இதனை தான் minimum alternative tax என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த வரி கிட்டத்தட்ட 20% அளவு வரும்.

இந்த வரியில் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

தற்போதைய அரசு இந்த விலக்கினை விலக்க முற்பட தான், FIIகள் தங்கள் பணத்தை எடுத்து சந்தையைக் கவிழ்த்து அரசை மிரட்டுகிறார்கள்.

நாம் நமக்கு தேவையான பணத்தை பெறும் வலுவான பொருளாதாரமாக இருந்தால் போங்கடா என்று விட்டு விடலாம்.

ஆனால் தற்போதைக்கு அவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் மடங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதற்காகவாது இந்தியா வலுவான நாடாக வேண்டும்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக