நீண்ட நாட்களாக எமது தனிப்பட்ட தேவையாக இருந்து வந்தது தான் இந்த பதிவாக மாறி உள்ளது.
நம்மிடம் லேப்டேப் இருக்கிறது. ஆனால் அதனை வெளியே எளிதில் எடுத்து சொல்ல முடியாமல் இருந்து வந்தது.
அதே நேரத்தில் எளிதில் எடுத்து செல்லலாம் என்று டேப்லெட் வாங்கினால் கீபோர்ட் இல்லாமல் எதுவும் எளிதில் எழுத முடியவில்லை.
ரெண்டும் சேர்ந்து வந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்திருந்த சமயத்தில் LAPTAP என்று புதிய தயாரிப்பு வந்தது.
அதாவது LAPTOP + TABLET = LABTAB.
கீபோர்ட் இல்லாமல் பயன்படுத்திக் கொண்டால் டேபிலேட்.
கீபோர்ட்டை சொருகி வைத்தால் லேப்டாப்.
கீபோர்ட்டை வைப்பதும் வைக்காமல் இருப்பதும் நமது இஷ்டம்.
இதனால் லேப்டாப்பிறகு தனியாக காசும், டேபிலேட்டிற்கு தனியாக காசும் செலவழிக்க வேண்டாம்.
ஆனால் கடந்த வருடம் இந்த LABTABன் விலை என்பது நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விலை வைக்கப்பட்டிருந்தது கொஞ்சம் அதிகமாகவே தோன்றியது.
தற்போது இந்த அடிப்படையை பின்பற்றி மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் விலை லேப்டேப்பாக மாற்றி விட்டார்கள். அதாவது விலை 14,999 ரூபாய் தான்.
முன்னாள் இருந்த டேப்லெட்டுகள் ANDROID அடிப்படையில் இயங்கி வந்தன. இதனால் விண்டோஸ் தொடர்பான டாகுமென்ட்டுகள், பவர் பாயிண்ட் போன்றவை தயாரிப்பது என்பது கடினமாக இருந்தது.
இந்த லேப்டேப்பில் Windows 8 OSயை இணைத்துள்ளார்கள். இதனால் விண்டோஸ் தொடர்பான டாகுமென்ட்டுகள் எளிதில் தயாரிக்கலாம்.
மற்றபடி, 10 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 Ghz இன்டெல் ப்ரோசெசர், 2 MP கேமரா போன்றவை சிறப்பம்சங்கள்.
அதே நேரத்தில் உள்ளடக்க மெமரி 32GB அளவு கொடுக்கப்பட்டுள்ளது குறைவாக உள்ளது. ஆனால் இன்னும் SD கார்டு மூலம் 64 GB மெமரி இணைத்துக் கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு 1TB Cloud மெமரி கொடுத்துள்ளார்கள்.
சிம் போட்டு கால், வீடியோ கால் போன்றவை செய்து கொள்ளலாம். இரண்டு சிறிய ஸ்பீக்கர்களும் இணைக்கப்பட்டுள்ளது. எடையும் ஒரு கிலோ அளவு தான்.
அதிக காசு கொடுத்து வெறும் டேப்லெட் வாங்குவதற்கு பதில் இந்த தயாரிப்பை வாங்கலாம்.
மே 1, 2015 முதல் இந்த மாடல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அமேசான் இணைப்பை பார்க்கலாம்.
Micromax Canvas Laptab in Amazon
பழைய லேப்டாப்பை கொடுத்து எக்ஸ்சேஞ்சும் செய்து கொள்வதற்கு அமேசான் வழி செய்து உள்ளது.
தொடர்பான கட்டுரை:
கூகுள் அறிமுகப்படுத்தும் பட்ஜெட் விலை லேப்டாப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக