திங்கள், 25 மே, 2015

பிக்ஸ்ட் டெபாசிட் எதிர்மறை வட்டி தந்தால் எப்படி எதிர் கொள்ளலாம்?

பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்தால் மாதந்தோறும் வட்டி தருவார்கள்.

இதனை வட்டி என்று சொல்வதை விட நாம் போடும் பணத்தின் மதிப்பு எவ்வளவு குறைகிறதோ அதனை ஈடு கட்டி தருகிறார்கள் என்று சொல்லலாம்.




அதாவது எவ்வளவு பணவீக்கம் இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு இந்த வட்டி விகிதங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.


ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் பொருளின் மதிப்பு அடுத்த வருடம் 1100 ரூபாயாக மாறி இருக்கும். இந்த நூறு ரூபாய் தான் நமக்கு வட்டியாக தரப்படுகிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வட்டி நமக்கு எதிர்மறை வருமானமாகவும் மாறி விடுகிறது.

எப்படி என்றால்,

ஐந்து வருடத்திற்கு குறைவான வைப்பு நிதிகளுக்கு வருமான வரி கொடுக்க வேண்டும் என்பது விதி முறை.

பொதுவாக நாம் போடும் பிக்ஸ்ட் டெபாசிட்டுகள் இரண்டு, மூன்று வருடங்கள் வரை இருப்பதால் அதில் கிடைக்கும் வட்டியும் நமது வருமானமாக பார்க்கப்படும். அந்த வருமானத்திற்கு வட்டி கட்ட வேண்டி இருக்கும்.

இந்த வருமான வரி சதவீதம் ஒவ்வொருவர் வருமான வரம்பிற்கு ஏற்ப மாறுபடும். அதில் 20%, 30% வருமான வரி கட்டுபவர்களுக்கு பிக்ஸ்ட் டெபாசிட் என்பது எதிர்மறை வருமானத்தையே கொடுக்கிறது.

இதனை செயல்முறை விளக்கமாக தர கீழே ஒரு அட்டவனையை இணைத்துள்ளோம். பாருங்கள்!



ஒரு லட்ச ரூபாய் பிக்ஸ்ட் டெபாசிட் போட்டு வைக்கும் நண்பருக்கு 8.7% என்ற விகிதத்தில் 8770 ரூபாய் வட்டி கிடைக்கிறது.

அதில் 20% வருமான வரி செலுத்தினால் 1807 ரூபாய் வரி கொடுக்க வேண்டி இருக்கும். இப்பொழுது நிகர லாபம் 6963 ரூபாய். அப்படி என்றால் வரிக்கு பிறகு வட்டி 6.96%.

இந்த லாபத்தில் உத்தேசமாக பணவீக்கத்தை 7.50% என்று கழித்துக் கொண்டால் நமது வருமானம் -0.54% (6.96- 7.5%) என்று எதிர்மறையில் செல்லும்.

அதாவது மொத்தத்தில் அரை சதவீதம் நட்டம். கொடுக்கிற மாதிரி கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கி இருப்பார்கள்.

இது தான் நடுத்தர குடும்ப மக்கள் நடுத்தரத்திலே இருக்க காரணம். அவர்கள் சேமிப்பு அவர்கள் உழைக்கும் அளவு அல்லது வளரும் அளவு வளரவே செய்யாது.

அவ்வாறு வளருவதற்கு பண வீக்கத்தை உங்கள் முதலீடு ஓவர்டேக் செய்ய வேண்டும். வரியையும் ஏதேனும் வழிகளில் தவிர்க்க வேண்டும்.

இது எப்படி முடியும் என்று பார்த்தால்,

7.5% பணவீக்கம் என்றால் 15%க்கும் மேல் வட்டி வருமானம் தரும் முதலீடுகளை தேடி கண்டு பிடிக்க வேண்டும். அதன் பிறகு முறையாக வரி கட்டாமல் எஸ்கேப் ஆக வேண்டும்.

அதற்கு இந்தியாவில் ELSS Mutual Fund என்று ஒன்று உள்ளது. மூன்று வருடம் அளவு வைத்துக் கொண்டால் வரியும் கிடையாது. அதே சமயத்தில் வருடத்திற்கு 15% அளவு வருமானமும் கிடைத்து இருக்கும்.

பணவீக்கத்தை கழித்து பார்த்தால் கூட வருடத்திற்கு எக்ஸ்ட்ரா 7% லாபம் கொடுத்து இருக்கும்.

பார்க்க: வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுப்பதாக இருந்தால் பங்குகளில் முதலீடு செய்யலாம். ஒரு வருடம் வரை வைத்துக் கொண்டால் போதும். டிவிடென்ட், லாபம் என்று எதற்கும் வரியும் கிடையாது. அதே சமயத்தில் லாபமும் வருடத்திற்கு 20% வரை பெற்று இருக்கலாம்.

பார்க்க: பங்குச்சந்தை லாபத்திற்கு வரி உண்டா?

இன்னும் கொஞ்சம் விளக்கமாக புரிய ராபர்ட் கியோசாகி எழுதிய பணக்கார தந்தை, ஏழை தந்தை என்ற புத்தகத்தை படித்து பாருங்கள்.

மனிதர் ஒரு கட்டத்தில் வங்கி திவாலானவர். ஆனால் அதன் பிறகு மீண்டு வந்தவர். அப்படியே நடைமுறை அனுபவங்களை தொகுத்துள்ளார். நன்றாக உள்ளது.

இந்த புத்தகத்தின் அமேசான் இணைப்பு இங்கே உள்ளது

Rich Dad Poor Dad in Tamil


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக