வியாழன், 28 மே, 2015

கமல் ஸ்டைலில் ஆந்த்ராக்சை உயிரோடு நாடு கடத்திய அமெரிக்கா

பொதுவாக கமல் படங்களை வெளிவந்த சமயத்தில் பார்த்தால் ஒன்றும் புரியாது.


சில வருடங்களுக்கு பிறகு அது தொடர்பான ஏதேனும் நிகழ்வுகள் நடந்த பின் பார்த்தால் அப்பொழுதே இந்த படத்தை  எடுத்திருக்காரே என்று தோன்றும்.தற்செயலோ அல்லது வேறு ஏதும் சக்தியா என்று தெரியாது.

ஆனால் அவர் படங்களில் சொன்ன நிகழ்வுகள் படம் வெளிவந்த சில வருடங்களில் நடந்து விடுகின்றன.

மகாநதி படத்தில் சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்ததை பற்றி அழகாக சொல்லி இருப்பார். படம் வெளிவந்த இரண்டாவது வருடத்தில் அந்த நிகழ்வுகள் பெருமளவு தமிழகத்தில் நடந்தது.

இதே போல் தான் தேவர் மகனில் சொன்ன ஜாதி மோதல்கள், ஹேராமில் சொன்ன ஐந்து முஸ்லீம் மோதல் போன்றவை அடுத்த சில வருடங்களில் நடந்தன.

உச்சகட்டமாக அன்பே சிவத்தில் சுனாமி பற்றி சொல்லியிருப்பார். அடுத்த வருடத்தில் சுனாமி வந்தது.

அந்த வகையில் கமல் ஒரு தீர்க்க தரிசி தான்.

அதே போல் தான் தசாவதாரம் படத்தில் ஆந்த்ராக்ஸ் என்னும் உயிர் கொல்லி கிருமியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதை பற்றி சொல்லி இருப்பார்.

இன்று அந்த நிகழ்வும் உண்மையாகி போனது.

அமெரிக்கா பெண்டகனை சார்ந்த ஆட்கள் ஆந்த்ராக்ஸ் கிருமியை உயிரோடு நாடு கடத்தி உள்ளனர். அதுவும் தசாவதாரம் படத்தில் வருவதைப் போல் கமெர்சியல் பிளைட்டில் தான் வந்துள்ளது.

தென் கொரியாவில் அமெரிக்காவின் ராணுவப்படை பல ஆண்டுகளாக தற்காப்பு என்ற பெயரில் முற்றுகையிற்றுள்ளது.

வட கொரியாவை கண்காணிப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது.

இந்த கொரியாவிலுள்ள மிலிட்டரி ஆய்வகத்தில் ஆந்த்ராக்ஸ் கிருமி பற்றி ஆய்வு செய்வதற்காக ஆந்த்ராக்சை கேட்டு உள்ளனர்.

அதுவும் இறந்த நிலையில் இருக்கும் கிருமி தான் அவர்களுக்கு தேவை.

ஆனால் அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்து உயிரோடு இருக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமியை தவறுதலாக அனுப்பி உள்ளனர்.காற்றின் மூலம் வேகமாக பரவும் இந்த கிருமி எளிதில் பல உயிர்களை காவு வாங்க வாய்ப்பு அதிகம். ஒரு அணுகுண்டை போட்டால் ஏற்படும் பாதிப்பை விட பல மடங்கு பாதிப்பை எளிதில் ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது.

அதனைத் தான் அமெரிக்க அதிகாரிகள் இவ்வளவு அஜாக்கிரதையாக அனுப்பி உள்ளனர்.

தற்போது அனுப்பப்பட்ட ஆந்த்ராக்ஸ் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்ட பிறகு அதன் அருகில் இருந்த 13 வீரர்கள் முன் எச்சரிக்கையாக தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இப்படி எல்லாம் விபரீத அறிவியல் ஆராய்ச்சி தேவையா என்று தான் சந்தேகம் வருகிறது. முக்கியமான ஆராய்ச்சி ஒன்றில் இவ்வளவு அலட்சியமாக இருந்தால் எதற்கு இந்த ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

சிறிய தவறுகள், பெரிய விபரீதங்கள்!« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக