வெள்ளி, 29 மே, 2015

பங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
பென்னி ஸ்டாக் என்றால் பயந்து ஓடுவதன் காரணங்கள் (ப.ஆ - 41)

நாம் எமது கட்டண சேவையின் மூலம் போர்ட்போலியோ என்ற சேவை அளித்து வருகிறோம்.


அதில் போர்ட்போலியோவை கொடுக்கும் போது ஒவ்வொரு பங்கிற்கான ஒதுக்கீடு சதவீதத்தைக் கொடுப்பது வழக்கம்.

பங்கு முதலீட்டில் இருப்பவர்கள் இதனை சீரியஸ் விடயமாக எடுத்துக் கொள்வது நல்லது.



பங்குச்சந்தை முதலீடு என்பது இருப்பதிலே அதிக ரிஸ்கானது.

நாம் என்ன தான் படித்து ஆராய்ச்சி செய்து ஒரு பங்கை தேர்ந்தெடுத்தாலும் சில சமயங்களில் நமது கணிப்பு தவறாகவும் வாய்ப்பு உள்ளது.

அந்த சமயத்தில் அந்த ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்து இருந்தால் மொத்த பணத்தையும் இழக்க வேண்டி இருக்கும்.

#1
இதனால் பல பங்குகளில் முதலீடு செய்வதை முதல் விதியாக எடுத்துக் கொள்வது நல்லது.

பல பங்குகள் என்றால் இருபது, முப்பது பங்குகளில் முதலீடு செய்தால் அந்த பங்குகளை சரிவர கண்காணிப்பது என்பது மிகவும் கடினம்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பங்கு சொத்து மதிப்பு 8000 கோடி. ஆனால் அவர் முதலீடு செய்யும் பங்குகளை பார்த்தால் 15க்குள் தான் வரும். அதிலும் இன்னும் பங்கு எண்ணிக்கையை குறைக்க முயலுவதாகவும் கூறி உள்ளார்.

#2
அதனால் நாமும் போர்ட்போலியோவில் உள்ள பங்கு எண்ணிக்கையை பத்துக்குள் வைத்து இருப்பது நல்லது.

அடுத்து நிறைய பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தோம். அதற்காக ஒரே துறையை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வது நலமாக இருக்காது.

இது எமது தனிப்பட்ட அனுபவம். ஆரம்பக் கட்டங்களில் வங்கி பங்குகள் தான் நல்லது என்று எல்லா பங்குகளையும் வங்கித்துறையிலே வைத்து இருந்தோம்.

பொருளாதார சுணக்கம் ஏற்படும் போது முதலில் அடி வாங்குவது வங்கி பங்காக இருந்ததால் எமது மொத்த போர்ட்போலியோவும் அடி வாங்கியது.

#3
இதனால் பல துறைகளை சார்ந்த பல பங்குகளை வைத்துக் கொள்வது ஒரு நல்ல சமநிலை ஏற்படுத்தி வரும்.

அடுத்து நிறுவனங்களின் அளவு முக்கியத்துவம் பெறுகிறது.

எல்லா பங்குகளையும் பெரிய அளவு நிறுவனங்களில் முதலீடு செய்தால் முதலீடு வேகமாக உயராது.

இதற்காக வேகமாக வளரும் நிறுவனங்கள் என்று கருதும் சிறிய நிறுவனங்களை போர்ட்போலியோவில் சேர்த்து வைப்பது நல்லது.

ஆனால் மொத்தமாக சிறிய நிறுவனங்களை மட்டும் வைத்துக் கொண்டால் சரிவுகளில் இந்த நிறுவனங்கள் தான் கடுமையாக அடி வாங்கும்.

#4
இதனால் Large, Mid, Small CAP நிறுவனங்களை 30%, 40%, 30% என்ற விகிதத்தில் வைத்துக் கொண்டால் போர்ட்போலியோ நல்ல விதத்தில் சமநிலைப்படுத்தப்பட்டிருக்கும்.

#5
இறுதியாக எக்காரணம் கொண்டும் ஒரு பங்கு நமது போர்ட்போலியோவில் 15% க்கும் மேல் செல்லாமல் பார்த்துக் கொள்வது என்பது மிக அவசியம்.

இந்த ஐந்து விதிகளையும் ஒவ்வொரு ஆறு மாதமொரு முறையும் உங்கள் போர்ட்போலியோவில் சரி பார்த்து வாருங்கள். ம்யூச்சல் பண்டில் இதைத் தான் செய்து வருகிறார்கள்.

எம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு தனி முதலீட்டாளனும் ஒரு குட்டி ம்யூச்சல் பண்ட் தான்.

இவ்வாறு செய்தால் பெரிதளவு நஷ்டத்தை எளிமையாக தவிர்க்கலாம்.

நாம் இலவசமாக கொடுத்த ஒரு போர்ட்போலியோவை இங்கு உதாரணமாக தருகிறோம்.



கட்டண சேவையில் ஜூன் மாத போர்ட்போலியோவின் தேதி கேட்டு சில மின் அஞ்சல்கள் வருகின்றன.

அதனை ஜூன் 13, 2015 அன்று பகிர்கிறோம். இதற்கான அறிவிப்பை தனிப் பதிவாகவும் எழுதுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.
வளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக