பொதுவாக இந்திய பங்குச்சந்தை அதிக அளவு வெளிநாட்டு முதலீட்டாளர்களை சார்ந்து இருக்கும்.
இதற்கு முக்கிய காரணம் உள்நாட்டில் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பது தான்.
கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் பார்த்தால் வெறும் இரண்டு சதவீதம் தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.
ஆனால் அமெரிக்காவில் 45% பேரும், சீனாவில் 10% பேரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றனர்.
இந்திய பங்குச்சந்தையில் கணினி மயமாக்கம் என்பது மெதுவாகவே வந்தது. இதனால் காகித தாளில் பங்குகளை வாங்கி விற்பது என்பது நடைமுறையில் ஒரு சிக்கலாகவே இருந்து வந்தது.
அதிலும் ஹர்ஷத் மேத்தா போன்ற ஆட்கள் சந்துகளில் புகுந்து சந்தையையே புரட்டி போட்டு வந்தனர்.
பார்க்க: ஓட்டைகளில் புகுந்து பணத்தை வேட்டையாடிய ஹர்ஷத் மேத்தா
இதனால் மக்களுக்கு பங்குச்சந்தையின் மீது ஒரு வித பயம் வந்தது.
தற்போது கணினி மயமாகிய பிறகு இந்த தவறுகள் பெரிதளவு குறைந்தன.
இணையம் வந்த பிறகு பங்கு வர்த்தகம் என்பது எளிதானது. அலுவலகத்தில் வைத்தே முதலீடுகளையும் தொடர முடிந்தது.
கடந்த ஒரு வருடத்தில் மோடி வந்த பிறகு பங்குச்சந்தையில் இந்த சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து உள்ளது என்று சொல்லலாம்.
தற்போது வெளிவந்த தரவுகள் படி, எட்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களிடமே உள்ளன.
இது இந்திய பங்குச்சந்தையின் மொத்த மதிப்பில் 21% என்பதாகும். கடந்த வருடம் இதே சதவீதம் வெறும் 7% ஆகவே இருந்தது.
இந்த வளர்ச்சி உண்மையிலே பிரமிக்க வைக்கிறது.
இதனால் தான் வெளிநாட்டு ஆட்கள் பெருமளவில் முதலீடுகளை திரும்ப பெற்றாலும் சந்தை அதிக அளவு சரியாமல் மீண்டு வந்தது.
இன்னும் 50% முதலீடுகள் FIIகள் கையில் தான் உள்ளது. ஆனாலும் இதே அளவு கடந்த வருடம் 70% என்று இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் FIIக்களை சார்ந்து இருப்பது குறைய தொடங்கி உள்ளது என்பது ஆரோக்கியமான விடயம்.
தற்போதைய சரிவு நேரம் கூட பங்குச்சந்தை முதலீட்டிற்கு ஏற்றது தான். அடுத்த சில வருடங்கள் நமக்கு கணிசமான முதலீட்டு லாபத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது. விருப்பம் இருந்தால் கால தாமதம் வேண்டாம்!
இந்த நேரத்தில் எமது போர்ட்போலியோ சேவைகள் மூலமும் 250 தமிழ் நண்பர்கள் பங்குச்சந்தை முதலீட்டில் இணைந்துள்ளார்கள் என்பதையும் பகிர்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக