புதன், 20 மே, 2015

கூகுள் அறிமுகப்படுத்தும் பட்ஜெட் விலை லேப்டாப்

கூகுள் இந்தியாவில் தனது க்ரோம் இயங்கு தளத்தை பயன்படுத்தி பட்ஜெட் விலையில் லேப்டாப்பை இன்று அறிமுகப்படுத்த உள்ளது.


அதனைப் பற்றிய விமர்சனத்தை பார்ப்போம்.

நீங்கள் லேப்டாப்பை டாகுமென்ட், கேம்ஸ் போன்றவற்றிற்கு பயன்படுத்தாமல் அதிக அளவில் இன்டர்நெட் பயன்பாடுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் இந்த பட்ஜெட் லேப்டாப் பெரிதும் உதவும்.

கூகுள் இந்த லேப்டாப்பை ChromeBook என்று அழைக்கிறது.

Nexian மற்றும் Xolo என்ற இரு நிறுவனங்கள் மூலம் ChromeBook இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Nexian Chromebook 
இது கூகுளின் Chrome OSயை அடிப்படையாக வைத்து இயங்கும். இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் போது இயங்கு தளமும் தானாகவே Update செய்யப்படும்.

1.8 GHz Cortex-A17 Quad core Processor, 2GB RAM, 11.6 இன்ச் மானிடர் போன்றவை லப்டோப்பை பற்றிய விவரங்கள்.

1MP கேமரா சாட் செய்வதற்காக இணைக்கப்பட்டுள்ளது.

16 GB மெமரி லேப்டாப்புடன் இணைக்கப்பட்டு இருக்கும். அதில் 9 GB அளவு நமது பயன்பாட்டுக்கு உள்ளது. ஆனால் SD Card மூலம் நமது மெமரி தேவையை விரிவாக்கி கொள்ளலாம். அறிமுக சலுகையாக 64 GB மெமரி கார்டு தருகிறார்கள்.

லேப்டாப்பின் பேட்டரி 8 மணி நேரம் தாங்கும் தன்மை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமேசான் தளம் மூலம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. விலை 12,999 ரூபாய்.

கிடைக்கும் இணைப்பு இங்கே உள்ளது.

அமேசான் தளத்தில் Nexian Chromebook

Xolo Chromebook
இந்த லேப்டாப்பும் கிட்டத்தட்ட மேல் சொன்னவாறு தான்.

ப்ரோசெஸர் மட்டும் வேறுபடுகிறது. (1.8 GHz Rockchip RK3288 Quad-Core Cortex-A17 processor)

கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட ப்ரோசெஸர் என்பதால் ஆயிரம் ரூபாய் மேலே உள்ளதை விட அதிகம். விலை 13,999 ரூபாய்.

இந்த லேப்டாப் ஸ்னேப்டீல் தளம் மூலம் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

கிடைக்கும் இணைப்பு இங்கே உள்ளது.

ஸ்னேப்டீல் தளத்தில் XOLO Chromebook


இன்டர்நெட் பயன்பாடை சார்ந்து இருப்பவர்கள் மற்றும் பயணத்தில் பயன்படுத்துபவர்களுக்கு இந்த லேப்டாப் அதிக அளவு உதவும்.

இரண்டாவதை விட முதலாவது லேப்டாப்பே நமது குறைந்த பட்ச தேவைக்கு போதுமானது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக