வியாழன், 21 மே, 2015

குழந்தைகளுக்காக LICயின் ஒரு இன்சூரன்ஸ் திட்டம்

குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு திட்டமிடுபவர்களுக்காக ஒரு முதலீட்டு முறையைப் பற்றி பார்ப்போம்.


இந்த பதிவை எழுத காரணமாக இருந்த நண்பர் தண்டபாணி அவர்களுக்கு நன்றி!



இந்த திட்டம் LICயால் வழங்கப்படுகிறது. திட்டத்தின் பெயர் Child Fortune Plus Plan.



பொதுவாக பலரும் குழந்தைகளுக்கான சேமிப்பு முறைகளில் பாதுகாப்பான வழிமுறைகளைத் தான் பெரும்பாலும் தேடுவார்கள்.

அதனால் குழந்தைகளுக்காக தயார் செய்யும் போது பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய யோசிப்பார்கள்.

அந்த சூழ்நிலையில் தான் Child Fortune Plus திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுவும் இன்சூரன்ஸ் போல் தான். ஆனால் காப்பீடு குழந்தைகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

பெற்றோருக்கு திடீர் மறைவு ஏற்பட்டால் காப்பீட்டு பணம் குழந்தைகளுக்கு சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதில் ஒரு முறை தவணையில் பிரிமியம் செலுத்திக் கொள்ளலாம். அதே வேளை காலாண்டு, அரையாண்டு, வருடத்திற்கு ஒரு முறை என்றும் பிரிமியம் செலுத்திக் கொள்ளலாம்.

பெற்றோர் வயது 35 வயதிற்குள் இருப்பின் ஒரு தவணை பிரிமியத்தில் இருந்து அதிகபட்சம் ஐந்து மடங்கு வரை காப்பீடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு வயதேற இந்த காப்பீடு தொகை குறைகிறது.

அதாவது 35 வயதிற்குள் இருக்கும் தந்தை ஒரு லட்ச ரூபாயை ஒரு தவணை பிரிமியம் என்று செலுத்தும் போது அவருக்கு ஏதேனும் ஏற்படுமாயின் ஐந்து லட்ச ரூபாய் வரை குழந்தைக்கு வந்து சேரும்.

எந்த விபத்தும் ஏற்படாமல் இருந்தால் குழந்தையின் 25வது வயதில் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

முதிர்வு தொகை நாம் தேர்ந்தெடுக்கும் விருப்ப முறையை பொறுத்து அமைகிறது.

அதாவது இந்த திட்டத்தின் கீழ் Bond Fund, Secured Fund, Balanced Fund, Growth Fund என்று நான்கு முறைகள் உள்ளன.

இதில் Bond Fund என்பதில் நமது முதலீட்டுத் தொகை பங்குசந்தைகளில் முதலீடு செய்யப்படாது.

Growth Fund என்பதில் 40% முதல் 80% வரை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படும்.

மற்ற இரு முறைகள் இடைப்பட்ட விகிதத்தில் அமையும்.

நாம் ரிஸ்க் குறைவாக எடுப்பவர்களுக்கு Secured Fund முறையும், கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் ஓகே என்பவர்களுக்கு Balanced Fund முறையையும் பரிந்துரைக்கிறோம்.

இந்த திட்டம்' LICயால் நிர்வகிக்கப்படுவதால் குறைந்த அளவு சேவைக் கட்டணமாக 5% அளவு வசூலிக்கப்படுகிறது. இது மற்ற திட்டங்களை விட குறைவான கட்டணம் ஆகும்.

LIC ஒரு அரசு நிறுவனம் என்பதால் பாதுகாப்பாகவும் கருதலாம்.

மேலும் விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
https://www.licindia.in/children_need_009_benefitIllustration.html


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக