செவ்வாய், 12 மே, 2015

ஓரிடத்தில் நிலை கொண்டு ஊசலாடும் சந்தையில் வாய்ப்புகள்

நேற்று சந்தை 400 புள்ளிகள் சரிந்தது. இன்று மீண்டும் 400 புள்ளிகள் கூடியது.


இந்த இரண்டிலுமே சமீப காலமாக சொல்லப்பட்டு வரும் FIIகளின் கைவண்ணம் இல்லை என்றே கருத முடிகிறது.



30000 புள்ளிகளில் இருந்து 27000 என்ற நிலைக்கு கீழே கொண்டு வந்ததில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காரணமாக இருந்தார்கள். இதனை மறுப்பதிற்கில்லை. கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாய் சந்தையை விட்டு சென்றது.

அதற்கு பல காரணங்கள் இருந்தன.

சீனாவில் IPO வருவது முதல் மசோதாக்கள் முடக்கபப்டுவது வரை பல காரணங்கள் கூறப்பட்டன.

விவரமாக இங்கே பார்க்கலாம்.

ஆனால் இந்த வாரம் அப்படி இல்லை.

700 புள்ளிகள் குறைந்தது என்றால் மறுநாள் 600 புள்ளிகள் கூடி விடுகிறது.  அதே போல் 400 புள்ளிகள் குறைந்து மறு நாள் அதே அளவு கூடி விடுகிறது.

இது குறுகிய கால வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள் சேர்ந்து நடத்தும் விளையாட்டு போலே இருக்கிறது.

இனியும் குறையும் என்று பயந்து நீண்ட காலம் வைத்து இருந்த முதலீடுகளை தற்போது விற்க வேண்டாம். விற்பதற்கான நேரம் தற்போது இல்லை.

தற்போதைக்கு சந்தை 27,000 என்பதில் நிலை பெற்று அங்கிட்டு 300 இங்கிட்டு 300 என்று அசைந்தாடிக் கொண்டிருக்கிறது.

எமக்கு 2007-08 ரிசிசனில் வாங்கிப் போட்ட முதலீடுகள் நல்ல ரிடர்ன் கொடுக்க நான்கு வருடங்கள் ஆனது. ஆனால் ரிடர்ன் கொடுக்கும் சமயத்தில் மடங்குகளில் இருந்தது.

அதே போல் தற்போதைக்கு பொறுமை தான் அதிக பலனைத் தரும்.

புறக்காரணிகளை தள்ளி நமது நிறுவனம் நன்றாக போகிக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கை இருக்கும் வரை பங்குகளை வைத்து இருப்பதே ஒரு நல்ல முதலீடு.

இந்த சூழ்நிலையில் எமது முந்தைய கட்டுரைகள் ஒரு தைரியத்தை தரும் என்று நினைக்கிறோம்.

மேலும் ஒவ்வொரு நேர்மறை செய்திகளாக வர வர சந்தை கூடும். இன்னும் பெரிய அளவிலான எதிர்மறை செய்திகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

இந்த வருட இறுதியில் சந்தையில் சென்செக்ஸ் 32,000 புள்ளிகளைத் தொடும் என்று கூட கூறுகிறார்கள். அதாவது தற்போதைய நிலையில் மேலும் 20% உயர்வு.

அதுவும் சாத்தியம் என்றே தோன்றுகிறது.



பங்குச்சந்தையின் அடிப்படையே எல்லாரும் விற்கும் போது நாம் வாங்க வேண்டும். உச்சத்தில் செல்லும் போது நாம் விற்க வேண்டும்.

இந்த ஒரு விடயத்திற்கு மட்டும் ஊரோடு ஒத்து வாழும் பழமொழியைக் கைவிட்டு விடலாம்.

ஒவ்வொரு முறை புரோக்கர்கள் புண்ணியத்தால் குறையும் போது வாங்கி போடலாம். தற்போது நல்லாவே ஏற்றி இறக்குகிறார்கள்!

மே 16 அன்று எமது மே மாத போர்ட்போலியோ வரவிருக்கிறது. 1200 ரூபாயில் 8 பங்கு பரிந்துரைகளை பெறலாம்.

குறுகிய காலத்திற்கு வாங்கி விற்பது போன்று இல்லாமல் குறைந்தது இரண்டு வருடம் போன்ற நீண்ட கால முதலீட்டிற்கு விருப்பம் இருந்தால் இதில் இணையலாம்.

எம்மை muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பையும் பார்க்கலாம்.
மே 2015 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக