புதன், 27 மே, 2015

மேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும் NESTLE

கடந்த வாரம் தான் மேகியில் கண்டுபிடிக்கப்பட்ட சில சத்து குறைபாடுகள் கணிசமான அளவில் NESTLE பங்கை பாதிக்கலாம் என்று எழுதி இருந்தோம்.


படித்து எச்சரிக்கையானவர்கள் 5% அளவு நஷ்டத்தை இந்த வாரம் தவிர்த்து இருப்பார்கள்.

பார்க்க:
மேகியில் உப்பு அதிகம், தவிர்க்க வேண்டிய NESTLE பங்கு

மேகியை சாப்பிட்டு விட்டு விளம்பரம் பண்ணுங்கம்மா.. 
இரு வாரங்கள் முன்பு தான் NESTLE தனது நிதி அறிக்கையைக் கொடுத்தது. அதில் நல்ல லாபத்தைக் காட்டி இருந்தது. அதிலும் மேகி தான் அதிக அளவு வளர்ச்சியைக் கொடுத்து இருந்தது.

தற்போது அதே மேகி தான் காலை வாரி விட்டுள்ளது.

NESTLEன் மொத்த வருமானத்தில் 30% மேகியின் மூலமே வருவதால் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த பிரச்சினையை மிகவும் சீரியஸாக அணுகுகிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு விளக்கம் தரும் விதமாக இன்டர்நெட், டிவி, பத்திரிக்கை என்று அணைத்து மீடியாக்களையும் பயன்படுத்த முடிவு செய்து உள்ளார்கள்.

இதற்காக ஏற்கனவே மேகி விளம்பரத்தில் வரும் மாதுரி தீட்சித்தை அணுகியுள்ளார்கள். மேலும் அவர் இரு குழந்தைகளுக்கு தாயானவர் என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

இதே போல் தான் முன்பு Cadbury சாக்லேட்டிற்கு பிரச்சினை வந்த போது அமிதாப்பச்சனும், கோலாவிற்கு பிரச்சினை வந்த போது அமீர் காணும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர்.

இப்படி விளம்பரங்களுக்கே ஒரு பெரிய செலவு செய்ய வேண்டும் போல் இருக்கிறது. இது வரும் நிதி அறிக்கைகளில் எதிரொலிக்கலாம்.

ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் 10% மேகி விற்பனை குறைய தொடங்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன. சில இடங்களில் 30% அளவு கூட குறைந்துள்ளது. ரிப்போர்ட் எதிர்மறையாக இருக்கும் சமயத்தில் இன்னும் விற்பனை டல்லடிக்கும்.

சாக்லேட், கோலா போன்று இல்லாது மேகி ஒரு முக்கிய உணவு பொருளாகவே பயன்பட்டு வந்தது. அதனால் இந்த பிரச்சினையை மக்கள் சீரியஸாகவே எடுப்பார்கள். எளிதில் மறப்பதும் கடினம்.

இதில் இருந்து மீண்டு வருவது என்பது NESTLEக்கு இருக்கும் அதிர்ஷ்டங்களை பொறுத்து தான் இருக்கிறது.

அதனால் NESTLE பங்கு மலிவாக கிடைக்கிறது என்று வாங்கி போட வேண்டாம்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக