வியாழன், 14 மே, 2015

அரசியல் விளையாட்டுக்களில் தடுமாறும் HOUSING நிறுவனம்

நேற்று 100 புள்ளிகள் சரிந்த சந்தை இன்று அதே அளவு ஏறி உள்ளது.


நேற்று முன்தினம் தான் சொல்லி இருந்தோம். ட்ரேடர்கள் புண்ணியத்தால் ஒரு நாள் சந்தை எவ்வளவு இறங்குகிறதோ அதே அளவு அடுத்த நாள் ஏறி விடுகிறது.

பார்க்க: ஓரிடத்தில் நிலை கொண்டு ஊசலாடும் சந்தையில் வாய்ப்புகள்



இன்னும் சில வாரங்கள் கூட இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

முதலீடு என்று எண்ணினால் குறையும் போது மட்டும் வாங்கி போடலாம். மற்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

சந்தையின் மந்த நிலை ஒரு வகையில் போரடிக்கவே வைக்கிறது.

அதனால் அடுத்த விஷயத்தை பார்ப்போம்.

Housing.com என்ற நிறுவனத்தின் 26 வயது சிஇஒ வாலிபர் பண்ணும் அரசியல் அலம்பல்கள் உச்சத்துக்கு சென்று உள்ளது.

அவர் பெயர் ராகுல் யாதவ். ஏற்கனவே இந்த வாரம் தான் முதலீட்டாளர்களை கடுமையாக திட்டி மெயில் எழுதி இருந்ததை பற்றி எழுதி இருந்தோம்.

பார்க்க: சிறு வயது சிஇஒக்களால் சிக்கல்களில் வளரும் கம்பெனிகள்

தற்போது அடுத்த அரசியலை ஆரம்பித்து விட்டார்.

தம்மிடம் இருக்கும் HOUSING நிறுவன பங்குகள் அனைத்தையும் பணியாளர்களுக்கு தானமாக கொடுக்க உள்ளாராம்.

இந்த பங்குகளில் ஒரு பகுதியை மட்டும் தானமாக கொடுத்து இருந்தால் கூட மக்கள் நம்பி இருப்பார்கள்.

இவர் மொத்தமாக கொடுப்பதை பார்த்து இவர் நிறுவனத்தை விட்டு ஓடப் போகிறாரா? அல்லது நிறுவனம் ஓடப் போகிறதா? என்ற சந்தேகத்தை விதைத்துள்ளார்.

கடந்த வாரம் தான் HOUSING நிறுவன நிர்வாகம் பணியாளர்களுக்கு ESOP முறையில் பங்குகளை கொடுக்க முடிவு எடுத்து இருந்தது.

இவர் அதற்கு முன்னதாகவே தான் கொடுக்கிறேன் என்று திடீர் அறிவிப்பு செய்து இருப்பது பல சந்தேங்களை கொடுத்து இருக்கிறது. இவ்வாறு தானமாக கொடுக்கும் பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் மதிப்பாகும்.

இவரது அறிவிப்பால் வேலை செய்பவர்களுக்கு ஒரு வருட சம்பளம் போனசாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் பணியாளர்களை தம் பக்கம் இழுப்பதற்காக இந்த யுத்தியை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகமும் வருகிறது.

அதிலும் Venture Capital முதலீடு செய்யும் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு பல விதி முறைகள் உள்ளன. அதற்கு நிர்வாக ஒப்புதலை பெற வேண்டும் என்பது ஒரு விதி முறை. இவரது அன்பளிப்புக்கு நிர்வாகம் ஒத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே!

தற்போது எனக்கு 26 வயது தான் ஆகிறது. இதனால் பணத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறி உள்ளார்.

இதே நபர் தான் சில மாதங்கள் முன் சலிப்பு வரும் வரை பணம் சம்பாதிப்பேன் என்றும் கூறி இருந்தார்.

இவ்வாறு நிறைய முரண்கள் இந்த அறிவிப்பின் பின் உள்ளன.

இந்த அரசியல் பப்ளிசிட்டிகள் யாருக்கு நல்லதோ இல்லையோ HOUSING நிறுவனத்திற்கு நல்லதில்லை. பணியாளர்களுக்கும் சேர்த்து தான்.

நாளை எமது மே மாத போர்ட்போலியோ வர உள்ளது. பல நண்பர்கள் இணைந்ததற்கு நன்றி!

மேலும் விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் இணைந்தால் தயார் செய்ய ஏதுவாக இருக்கும்.

எமது மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக