நேற்றைய சந்தை 400 புள்ளிகளுக்கும் அதிகமாக கூடி மகிழ்வை அளித்தது.
கடந்த ஒரு பதிவில் தற்போதைய சூழ்நிலையில் சந்தை கரடியின் பிடியில் உள்ளதா? காளையின் பிடியில் உள்ளதா? என்பதை அறிய டிப்ஸ் சொல்லி இருந்தோம்.
பார்க்க:
200 நாள் தாழ்வை அடைந்த நிப்டி. என்ன செய்யலாம்?
கடந்த மாத குறுகிய கால வர்த்தகங்கள் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று சந்தை 400 பள்ளிகள் உயர்ந்து நேர்மறை திசையை காட்டியுள்ளதாக கருதிக் கொள்ளலாம்.
இதற்கு ஆட்டோ நிறுவனங்களின் வாகன விற்பனை கணிசமாக கூடியது ஒரு காரணமாக அமைந்தது. மாருதி, மகிந்திரா, அசோக் லேய்லேண்ட் என்று பல நிறுவனங்களும் நல்ல விற்பனையைக் காட்டி இருந்தன. அதுவும் 30%க்கும் மேல் விற்பனை வளர்ச்சியைக் கண்டிருந்தது.
இதனை சந்தை உயர்வதற்கு காரணியாக கருதி கொண்டது.
ஏற்கனவே கடந்த காலாண்டு முடிவுகளில் ஆட்டோ நிறுவனங்களின் நிதி முடிவுகள் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
இன்னொரு காரணியாக அரசு ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கு ஒரு சலுகையை அளித்தது. சந்தை விலை போக மீதி மானியங்கள் அனைத்தும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்பது தான். இந்த முடிவு நீண்ட கால நோக்கில் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு பயனைத் தரும்.
இதனால் ஹிந்துஸ்தான், பாரத் போன்ற எண்ணெய் விநியோக நிறுவன பங்குகள் 5% உயர்வை சந்தித்தன.
இப்படி நேற்றைய சந்தை நிலவரங்கள் நல்ல நம்பிக்கையைக் கொடுத்தன. நீண்ட கால நோக்கில் முதலீடுகளை தொடரலாம்.
எமது மே மாத போர்ட்போலியோவை மே 16 அன்று கொடுக்கலாம் என்று இருக்கிறோம். அறிவிப்பை தனிப் பதிவாக எழுதுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..
முதலீடு போர்ட்போலியோ கட்டண சேவை
muthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக