SBI வங்கியின் நிதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி. அதிலும் பொதுத் துறை வங்கியாக இருப்பதால் நாட்டின் பொருளாதார நிலையை வெளிக்கொணரும் தன்மை வாய்ந்தது.
SBI வங்கி தான் அதானி முதல் மல்லையா வரை நிறைய பேருக்கு கடன்களை வழங்கியுள்ளது.
தனியார் வங்கிகள் பார்த்து பார்த்து கடன் அளிக்கும் சமயத்தில் பொது துறை வங்கிகள் ரிஸ்க் பாராமல் நிறைய தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கியுள்ளன.
அதனால் தனியார் வங்கிகளை ஒப்பிடும் போது அங்கு வாராக்கடன்களும் அதிகம். இப்படி கொடுத்து தேய்ந்து போன வங்கிகளில் ஒன்று என்று IOBயையும் சொல்லலாம்.
கடந்த காலாண்டிலேயே வாராக் கடன்களில் கொஞ்சம் முன்னேற்றம் காட்டிய SBI வங்கி இந்த முறை அதை விட நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது.
கடந்த காலாண்டில் 4.97% வாராக் கடன்கள் இருந்தது. இந்த காலாண்டு 4.25% என்று குறைந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும்.
வட்டி வருமானம் 14% அதிகரித்துள்ளது. லாபம் 17% அதிகரித்துள்ளது. டெபாசிட்கள் 10% அதிகரித்துள்ளது. கடன் புத்தகம் 10% அளவு அதிகரித்துள்ளது.
ஆக, மொத்தமாக பார்த்தால் நல்ல நிதி அறிக்கை ஆகும்.
அதே நேரத்தில் இந்த நிதி முடிவுகள் நாட்டு பொருளாதரத்தில் ஏற்படும் சிறிய முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது. வாராக் கடன்களில் ஏற்படும் முன்னேற்றம் இது வரை சுணங்கி கிடந்த உற்பத்தி துறை மீண்டு வருவதாகவும் கருத வாய்ப்பு இருக்கிறது.
மீடியம் ரிஸ்க் உடையவர்கள் கூட இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக