செவ்வாய், 26 மே, 2015

PF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..

ஒரு தலைமுறைக்கு முன்னர் சென்று பார்த்தால் அலுவலகங்களில் சேமிக்கப்படும் PF பணத்தை அவ்வளவு எளிதில் எடுக்க மாட்டார்கள்.


அந்த தொகை அந்த காலக் கட்டத்தில் பெரிது என்பதால் குழந்தைகள் கல்யாணம், படிப்பு, ஓய்விற்கு என்று பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதனால் நீண்ட காலம் ஒரு சேமிப்பாகவே செய்து வருவார்கள்.



ஆனால் தற்போது தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள் கூடி வரும் சூழ்நிலையில் இளைஞர்கள் அடிக்கடி நிறுவனங்களை மாற்றி வருகிறார்கள்.


அப்படி வரும் போது சம்பளத்துடன் ஒப்பிடுகையில் PF பணம் என்பது பெரிய தொகையாக தெரிவதில்லை. அதனால் PF பணத்தை ஓரிரு வருடங்களிலே எடுத்து விடுகிறார்கள்.

இனி அப்படி எடுக்கும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

அதாவது கடந்த பட்ஜெட்டில் அருண் ஜெட்லி முன்னதாகவே எடுக்கப்படும் PF பணத்திற்கு வரி விதித்துள்ளார்.

இதன்படி, ஐந்து வருடங்களுக்குள் எடுக்கப்படும் PF பணத்திற்கு 10 சதவீத வரி PF அலுவலகத்திலே பிடித்து விடுவார்கள்.

அதிலும் PAN எண்ணை PF படிவத்தில் குறிப்பிடா விட்டால் அதிகபட்ச வரியான 35 சதவீதம் பிடிக்கப்பட்டு விடும்.

இதெல்லாம் சிறிய தவறுகள் தான். ஆனால் இழப்பு அதிகமாக இருக்கும். நாம் மாதந்தோறும் சேமித்த பணத்தை அப்படியே அரசிற்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

அதனால் முடிந்த வரை ஐந்து வருடங்களுக்கு பிறகு PF பணத்தை எடுங்கள்.

ஒரு வேளை நாம் PF பணத்தை எடுக்கும் வருடத்தில் நமக்கு வேறு வருமானம் எதுவும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயங்களிலும் வரியில் இருந்து தப்பிக் கொள்ளலாம்.

அதற்கு Form 15G அல்லது Form 15 H போன்ற படிவங்களை PF அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு வரி எதுவும் பிடிக்க மாட்டார்கள்.

அதே போல் PF பணம் முப்பதாயிரம் ரூபாய்க்கும் கீழ் வந்தால் அதற்கும் வரி பிடிக்க மாட்டார்கள்.

இந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டு PF பணத்தை எடுங்கள். வரியில் இருந்து தப்பி அதிக அளவில் சேமிக்கலாம்!

பார்க்க:


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக