புதன், 20 மே, 2015

சிறு தொழில் கடனுக்கு உதவும் முத்ரா வங்கி

மோடி அரசால் கொண்டு வரப்பட உள்ள முத்ரா வங்கி திட்டம் ஓரளவு சிறு தொழில் முனைவர்களுக்கு நல்ல பயனைத் தரும்.


தற்போது வங்கிகளில் தொழில் துவங்க வேண்டும் என்றால் எளிதில் கடன் கிடைப்பதில்லை. அதற்கு பயந்தே மக்கள் கந்து வட்டிகளிடம் கடன் வாங்குகிறார்கள்.



கடுமையான வட்டி என்பதால் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வட்டியாகவே கட்டி விடுகிறார்கள். அதன் பிறகு தொழிலை மேம்படுத்துவது என்பது கடினமாகி விடுகிறது.

பலரது தொழில்கள் நலிவடைவதற்கு கந்து வட்டியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது.


இந்த நிலையில் பிரதம மந்திரியின் முத்ரா வங்கி திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

முத்ரா வங்கி என்பதன் விரிவாக்கம் Micro Units Development Refinance Agency என்பதாகும். (MUDRA)

இந்த திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அடுத்த ஏப்ரல் 2016 க்குள் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

இந்த வங்கிக்கு ஆரம்ப கட்ட முதலீட்டுத் தொகையாக அரசு 20,000 கோடி ரூபாய் வழங்கும். அந்த தொகையை வைத்து முத்ரா வங்கி சிறு தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்கலாம்.

சிறு தொழில் என்பதால் இந்தக் கடன் தொகை 10 லட்சத்துக்குள் மட்டும் இருக்கும்.

படித்து முடித்து வரும் இளைஞர்களுக்கு இந்த தொகை என்பது பெரியதே. ப்ளிப்கார்ட் நான்கு லட்சம் என்ற முதலீட்டிலே ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் கவனிக்க.

பார்க்க: இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி

இந்த திட்டத்தில் பணயமாக சொத்துக்கள் போன்று எதுவும் வைக்க வேண்டியதில்லை.

இந்த திட்டத்தின் கீழ் சிறிய தொழிற்சாலைகள், கடைகள், சலூன்கள், அழகு நிலையம், வாகனங்கள், உணவு சேவைகள் மற்றும் பதனிடுதல் என்று பல பிரிவுகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.

நமது தொழிலின் தன்மைக்கேற்ப கடனை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளார்கள்.

  • சிசு (Shishu) என்ற பிரிவில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். 
  • கிசோர் (Kishor) என்ற பிரிவில் ஐந்து லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். 
  • தருண் (Tarun ) என்ற பிரிவில் பத்து லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.


இந்த திட்டத்தால் சேட்டுக்கு ட்யூ கட்டாமல் வண்டி பறிபோனது என்று படங்களில் வரும் டயலாக்குகள் பெரிதளவு குறையலாம்.

முதலீடு இல்லாமல் இளைஞர்கள் உழைப்பு நேரம் வீணாக்கப்படுவதை தடுப்பதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவும்.

இந்த திட்டம் நடைமுறையில் வர இன்னும் ஒரு வருடம் வரை காத்து இருக்க வேண்டியுள்ளது. காத்திருப்பு தான் கொஞ்சம் நீளமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..
http://www.mudra.org.in/eligibility-criteria.pdf
http://www.mudra.org.in/Nodal-Officers-MUDRA.pdf

பயனுள்ள திட்டம்! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக