ஞாயிறு, 31 மே, 2015

புதிய சூத்திரத்தில் குழப்பத்தை தந்த இந்திய GDP தரவுகள்

கடந்த வெள்ளியன்று வெளியான இந்திய GDP தரவுகள் பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.


கடந்த காலாண்டில் 7.5% வளர்ச்சியை பெற்று இருந்தது. மொத்தமாக நிதி ஆண்டில் 7.3% வளர்ச்சியைக் கொடுத்து இருந்தது.

இதே காலக்கட்டத்தில் சீனா 7% வளர்ச்சியை மட்டும் பெற்று இருந்ததால் இந்திய வளர்ச்சி சீனாவை பின்னுக்கு தள்ளி இருந்தது என்று செய்திகள் வந்தன.



ஆனால் பொருளாதார வல்லுனர்கள் இந்த செய்தியில் அல்லது கொண்டாட்டங்களில் கொஞ்சம் அமைதியாகவே இருந்தனர்.

ஏனென்றால்,

முன்பெல்லாம் இந்தியா 7% வளர்ச்சி அடைந்த சமயத்தில் நிறுவனங்கள் 10%க்கும் மேல் வருமான வளர்ச்சியும், 20% வரை லாப வளர்ச்சியும் பெற்று இருந்தன.

ஆனால் தற்போது நிறுவனங்கள் இதே காலக்கட்டத்தில் 5.9% வளர்ச்சியே கொடுத்துள்ளன.

அப்படி என்றால், ஏதோ ஒன்று விடுபட்டு உள்ளது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் என்ன அன்று அறுதியிட்டு சொல்ல முடியாத அளவு குழப்பமான நடை முறை இந்த காலாண்டில் வந்து சேர்ந்தது.

அதற்கு கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.

இந்த வருட துவக்கம் முதல் புதிய GDP கணக்கிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்பெல்லாம் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து வந்த பொருட்களை அடிப்ப்டடையாக வைத்து தான் GDP கணக்கிடப்பட்டது.

ஆனால் புதிய முறையின் படி, மக்கள் வாங்கும் சக்தியை அடிப்படையாக வைத்து GDP சூத்திரங்கள் மாற்றப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க:
இந்திய GDPயைக் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்

இந்த புதிய சூத்திரம் தான் ஒரு தெளிவின்மையை கொடுத்துள்ளதாக கருதுகிறார்கள்.

பதிய சூத்திரத்தில் உள்ள மக்களின் வாங்கும் சக்தி என்பது பொருளுடன் சேர்த்து வரி, போக்குவரத்து செலவுகள், பெட்ரோல், போன்ற எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள், பணவீக்கம் என்று நிறுவனம் சாராத பலவற்றையும் உள்ளடக்கி வரும்.

இவற்றில் ஏற்படும் சிறு விலை உயர்வு மாற்றங்களும் GDPயை உயர்த்திக் காட்டி விடும். ஆனால் நிறுவனங்களுக்கு எந்த பயனையும் தந்து இருக்காது. இது தான் நிறுவன அறிக்கைகளுக்கும் GDP தரவுகளுக்கும் இடையே ஒரு தொடர்பின்மையை தோற்றுவித்துள்ளது.

தற்போதைய குழப்பத்திற்கு இந்த கணக்கீடும்  முக்கிய காரணம் என்று கருதுகிறார்கள்.

இது தவிர, இயற்கையாகவே இரண்டு தரவுகளை இரண்டு வெவ்வேறு சூழ்நிலைகளில் பெற்றால் அவற்றை ஒப்பிடுவது கடினம்.

அதனால் ஒரே சூத்திரத்தில் இரண்டு தரவுகள் பெறும் வரை நமது வளர்ச்சிகளின் கொண்டாட்டங்களை கொஞ்சம் ஒத்திப் போடலாம். அதற்கு இன்னும் ஒரு வருடமாவது காத்து இருக்க வேண்டி வரும்.



அரசும் நிதி பற்றாக்குறையை கணிசமாக குறைப்பதற்காக இந்த காலாண்டில் கிட்டதட்டே செலவே செய்யாமல் இருந்துள்ளனர். இதுவும் நிறுவனங்கள் வளர்ச்சியை பாதிக்க முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

தற்போது நிதி பற்றாக்குறையும் குறைந்து உள்ளது. இதனால் இனி வரும் வருடங்களில் கட்டமைப்பு போன்றவற்றிற்கான செலவுகளை கணிசமாக கூட்டுவார்கள் என்று நம்பலாம். அது தான் நிறுவனங்களுக்கும் சந்தைக்கும் அதிக பயன் தரும்.

எமது கட்டண சேவையின் அடுத்த போர்ட்போலியோ ஜூன் 15 அன்று வெளிவருகிறது. 

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க..
ஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com

தொடர்பான கட்டுரைகள்:
GDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக