ஒரு காலக்கட்டத்தில் மொபைல் வியாபாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த நோக்கியா கீழே வீழ்ந்தது என்பது மிகக் குறுகிய காலத்தில் நடந்து விட்டது.
அதற்கு ஆண்டிராய்டு தான் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். நோக்கியாவால் ஆண்டிராய்டு அளவு தமது சிம்பியான் இயங்கு தளத்தை பிரபலப்படுத்த முடியவில்லை.
அதனால் நஷ்டம் தாங்காமல் இறுதியில் நோக்கியாவும் வேறு வழியில்லாமல் ஆண்டிராய்டு பக்கம் திரும்ப ஆரம்பித்தது.
ஆனால் நோக்கியா கூகிள் பக்கம் நெருங்குவதை மைக்ரோசப்ட் நிறுவனத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அவ்வாறு இரு நிறுவனங்களும் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தால் மொபைல் உலகில் கூகிள் நிறுவனத்தை ஒன்றும் செய்ய முடியாது என்று மைக்ரோசப்ட் நினைத்தது.
அதனால் அவசர கதியில் நோக்கியாவின் மொபைல் போன்கள் பிரிவை வாங்கிக் கொண்டது.
இவ்வளவிற்கும் நோக்கியாவை வைத்து மைக்ரோசப்ட் என்ன செய்யப் போகிறது என்று திட்டமிடுதல் சரியாக கிடையாது. முழுக்க முழுக்க வியாபர அரசியல் காரணங்கள் நிறைந்த டீல் இது.
அந்த டீல் இந்த காலாண்டில் மைக்ரோசப்ட்டின் நிதி அறிக்கையிலும் கை வைத்து விட்டது.
இந்த காலாண்டில் 3.2 பில்லியன் டாலர் நஷ்டக்கணக்கு காட்டி உள்ளது. அதாவது ஒரு பங்கிற்கு 60 சென்ட் நஷ்டம் வந்துள்ளது.
7.5 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நோக்கியா பெரிதளவு லாபத்தை ஈட்டாமல் போனதே இந்த நஷ்டக்கனக்கிற்கு முக்கிய காரணம்,
இதனால் 7,800 நோக்கியா பணியாளர்கள் சீக்கிரம் வேலையை விட்டு நீக்கப்பட உள்ளனர்.
மைக்ரோசப்ட்டை பொறுத்த வரை விண்டோஸ் இயங்கு தளம் வியாபரம் 21% சரிந்தாலும், Cloud வியாபாரம் 96% உயர்ந்துள்ளது. அதனால் சரிசமப்படுத்திக் கொண்டனர்.
கணினி விற்பனை பல நாடுகளில் சரிந்து வருவதும் விண்டோஸ் வியாபாரம் படுத்ததிற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆக, ஆண்டிராய்டு வந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக