திங்கள், 20 ஜூலை, 2015

எதிர்பார்ப்புகளையும் மீறிய இன்போசிஸ் நிதி அறிக்கை

இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி அறிக்கை வெளியானது.


அதில் டாலர் வருமானம் 4.5% கூடியுள்ளது. ஆனால் 3% தான் எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த 15 காலாண்டுகளில் இது ஒரு நல்ல நிதி அறிக்கையாக பார்க்கப்படுகிறது.



இந்த காலாண்டில் இன்போசிஸ் 79 புதிய கிளின்ட்களை பெற்றுள்ளது. இதில் இரண்டு பேர் 200 மில்லியன் டாலர் வருமானம் கொடுப்பவர்கள்.

பூகோள அடிப்படையில் வட அமெரிக்கா நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவை தவிர மற்ற பகுதிகள் நேர்மறை வருமானத்தை கொடுத்துள்ளன.

இதனால் எதிர்கால வருமான எதிர்பார்ப்பையும் கூட்டி உள்ளது.

பணியாளர் பயன்படுத்தும் விகிதம் உயர்ந்துள்ளது. பணியாளர் விலகல் சதவீதம் 23% என்பதிலிருந்து 14% என்று கணிசமாக குறைந்துள்ளது.  இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

கடும் போட்டி காரணமாகவும், பணியாளர் ஊதிய உயர்வு காரணமாகவும் லாப மார்ஜின் உயரவில்லை. அது இனியும் கடினம் தான் போலத் தெரிகிறது.

மொத்தத்தில் சந்தை எதிர்பார்ப்பையும் மீறி ஒரு நல்ல நிதி முடிவுகளைக் கொடுத்துள்ளது.

இதனால் இன்போசிஸ் பங்கு 10%க்கும் மேல் உயர்வு கண்டது. அதோடு அல்லாமல் HCL போன்ற பிற மென்பொருள் நிறுவனங்களும் உயர்வைக் கண்டன.

TCS நிதி முடிவுகளால் துவண்டு கிடந்த மென்பொருள் பங்குகளுக்கு இது ஒரு ஊக்க செய்தி தான்.

தொடர்புடைய கட்டுரைகள்:
ஓரளவு எதிர்பார்ப்புடன் ஒன்றி வந்த டிசிஎஸ் முடிவுகள்


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக