செவ்வாய், 14 ஜூலை, 2015

ஒரு வருடத்தில் இரண்டு மடங்கு லாபம் கொடுத்த DION

இது ஒரு மகிழ்வான செய்தி...


DION என்ற SMALL CAP நிறுவனத்தை சரியாக ஒரு வருடங்களுக்கு முன்னால் 93 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க:
தில் இருப்பவர்கள் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்மென்பொருள் துறையில் நிதி மற்றும் வங்கிகளுக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம்.

ஆனால் பொருளாதார தேக்கத்தாலும் கடனாலும் துவண்டு கிடந்து இருந்தது.

FT நிறுவனத்தின் வீழ்ச்சி மற்றும் நிதித் துறையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இந்த நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என்று கணித்து இருந்தோம். கணிப்பு வீண் போகவில்லை.

இன்று அந்த பங்கின் விலை 185 ரூபாய் அருகில் உள்ளது. அதாவது ஒரு வருடத்தில் 100% அதிக லாபம் கிடைத்துள்ளது.

ரிஸ்க் எடுப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த பங்கினை பொதுவில் பரிந்துரை செய்து இருந்தோம்.

ஆனால் பல நண்பர்கள் முதலீடு செய்து இருந்ததை அறிய முடிந்தது. பலனடடைந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்த நிறுவனம் நல்ல நிதி அறிக்கையை கடந்த இரு காலாண்டுகளாக கொடுத்து இருந்தாலும் கடந்த மாதம் வரை 20% லாபத்துடன் சென்று கொண்டிருந்தது.

தற்போது திடீரென்று பங்கு மேலே உயர்ந்ததற்கான காரணம் சுவராஸ்யமானது.

இந்தியா அமெரிக்க அரசுடன் The Foreign Account Tax Compliance Act (FATCA) என்ற ஒப்பந்தத்தை கையெழுத்து இடுவதாக அறிவித்து உள்ளது.

இதன்படி இந்திய, அமெரிக்க அரசுகள் தங்கள் நாடுகளிக்கிடையே நடைபெறும் தனிநபர் வங்கி பரிவர்த்தனைகளை பகிர்வது என்பது தான் இந்த ஒப்பந்தம்.

அப்படி என்றால் வங்கி அல்லது முதலீட்டு நிறுவனங்கள் தான் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும். செயல்படுத்த வேண்டும் என்றால் மென்பொருள் வேண்டும்.

அதற்கான மென்பொருளை தயாரித்து ரெடியாக வைத்துள்ள ஒரே இந்திய நிறுவனம் DION என்பது குறிப்பிட்டத்தக்கது.

வங்கி மென்பொருள் துறையை பொறுத்த வரை போட்டியில்லாத சூழ்நிலையே இந்த நிறுவனத்திற்கு பாதி வெற்றித் தான். இதை தான் எமது பரிந்துரைக்கான முக்கிய காரணமாக கூறி இருந்தோம்.

ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் மட்டும் முதலீட்டில் தொடரலாம்.

இது வரை பொதுவில் சொல்லப்பட்ட மற்ற பங்குகளான VRL IPO (60% லாபம்) , SpiceJet (40%லாபம்), போன்றவையும் நிறைவான லாபத்தைக் கொடுத்துள்ளன என்பதையும் பகிர்ந்து கொள்கிறோம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக