ஒரு பொருளாதாரம் சாராத ஒரு கட்டுரையை தளத்தில் பார்ப்போம்.
தனிப்பட்ட முறையில், நாம் அதிக அளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முதலீடு செய்ய விரும்புவதில்லை. முதலில் அவ்வளவு மதிப்பானதா? என்று சந்தேகம் வரும். இரண்டாவது மற்ற பொருட்களை காட்டிலும் ராக்கெட் வேகத்தில் விலை குறைந்து விடும். அதன் பிறகு ஒன்றும் செய்யவும் முடியாது.
எப்பொழுதுமே சில நிறுவனங்கள் புதிய மாடல்களை சந்தைக்குள் கொண்டு வரும் போது பழைய ஸ்டாக்குகளை நல்ல சலுகைகளில் வழங்கி சீக்கிரம் விற்க முனைவார்கள். இதனால் புதிய மாடல்களை அதிக அளவில் பிரபலப்படுத்த முடியும் என்பது ஒரு நம்பிக்கை.
இது மொபைலுக்கும் சாலப் பொருந்தும். மொபைலைப் பொறுத்த வரை புது மாடல்கள் வரும் வேகம் என்பதும் மிக அதிகம்.
அதனால் ஒரு மொபைல் மாடல் வரும் போது அதற்கு முந்தைய இரண்டாவது மாடலை சென்று வாங்குவது நல்லது. இதனால் விலையும் கணிசமாக குறைந்து இருக்கும். அதே நேரத்தில் தேவையான அம்சங்களும் மொபைலில் இருந்து இருக்கும்..
சாம்சங் நிறுவனத்தில் இருப்பதால் கிடைத்த அனுபவங்களுள் இதுவும் ஒன்று.
அந்த வகையில் சந்தையில் கடந்த வருடம் வரை மிக அதிக விலையில், அதிக எண்ணிக்கையில் விற்று தற்போது நல்ல விலை சரிவை சந்தித்து இருக்கும் இரு மொபைல்களை பற்றி பார்ப்போம்.
Xiaomi Redmi 2
இந்த மொபைல் Xiaomi நிறுவனத்தால் விற்கப்படுகிறது. இது ஒரு வெற்றிகரமான மாடல்.
இது வரை 13 மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடந்த மாதம் வரை 6,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த மொபைலின் விலை தற்போது ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 5,999 ரூபாய்க்கு தருகிறார்கள்.
LTE, நல்ல ஸ்க்ரீன், அதிக நேரம் நீடித்து நிற்கும் பேட்டரி போன்றவை முக்கியமான நேர்மறை விடயங்கள் எல்லாவற்றையும் விட கொடுக்கிற காசுக்கு ஏற்ற பொருள்.
RAM 1GB, நினைவகம் 8GB, 32GB வரை SD card போட்டுக் கொள்ளலாம்.
கேமரா மட்டும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம்.
இந்த மொபைல் அமேசான், ப்ளிப்கார்ட் எல்லாவற்றிலும் ஒரே விலை தான். சேவையின் தரம் கருதி அமேசான் இணைப்பை மட்டும் கீழே தந்துள்ளோம்.
Mi Redmi 2 (White) in Amazon for Rs.5,999
Apple iPhone 4s
எங்கள் நிறுவனத்துடன் அடிக்கடி சண்டை போடும் நிறுவனம். ஆனால் தரம் என்று பார்த்தால் ஆப்பிளை மிஞ்ச இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம். ஆகாமலும் போகலாம்:)
ஐபோன் 6 வெளிவந்த பிறகு நான்கை சீக்கிரம் விற்க பார்க்கிறார்கள். அதனால் கடந்த வருடம் வரை இருபதாயிரம் ரூபாய்க்கு அருகில் விற்றுக் கொண்டிருந்த மொபைலை தற்போது 13,000 ரூபாய்க்கு அருகில் கொண்டு வந்துள்ளனர்.
இந்த மொபைலின் தரத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.
512 MB RAM, 8 GB உள்ளக நினைவகம், 8 மெகா பிச்செல் கேமரா கொடுத்துள்ளார்கள்.
ஐபோன் வைத்து இருந்தால் கெத்தாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தாரளமாக வாங்கலாம். விலையின் மதிப்புக்கேற்ற பொருள்.
அமேசானில் 13,600க்கு அருகில் கிடைக்கிறது. இணைப்பு இங்கே..
Apple iPhone 4S in Amazon for Rs.13,600
ஸ்னேப்டீலில் 13,300க்கு அருகில் கிடைக்கிறது. இணைப்பு இங்கே..
Apple iPhone 4S in Snapdeal for Rs.13,300
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக